என்.ஆர்.சி.யின் கீழ் பெற் றோருக்கு
குடியுரிமை வழங் கப்பட்டது; ஆனால், அதிலி ருந்து விலக்களிக்கப்பட்ட
நிலையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தை கள் இருப்பதாக
உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் கூறியது. இந்த
முரண்பாட்டின் விளைவாக, இந்த குழந்தைகள் தடுப்பு மய் யங்களுக்கு
அனுப்பப்படுவார் கள் என்ற அச்சம் இருந்தது.
இந்த குடும்பங்கள் பிரிக் கப்படாது என்று
வழக்குரை ஞர் வேணுகோபால் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மற்றும்
நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரிடம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஒரு உறுதி மொழியை
சமர்ப்பித்த வேணு கோபால், “குழந்தைகள் தடுப்பு மய்யங்களுக்கு அனுப்பப்படு
வதையும் அவர்களது குடும் பங்களிலிருந்து பிரிக்கப்படுவ தையும் என்னால்
ஏற்றுக் கொள்ள முடியாது. பெற்றோ ருக்கு குடியுரிமை வழங்கப் பட்ட குழந்தைகள்
தடுப்பு மய் யங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்'' என்று கூறி னார்.
இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசு
மற்றும் அசாம் அரசாங்கத் திற்கு தாக்கீது அனுப்பியதுடன், நான்கு
வாரங்களுக்குள் பதில் தருமாறும் கோரியது.
No comments:
Post a Comment