ஆகாஷ் கல்வி நிறுவனம் (ஏ.இ.எஸ்.எல்),
1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான தொழில்
மற்றும் ஊக்கப் பயிலரங்கை சென்னை அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில்
நடத்தியது.
இந்த பயிலரங்கின் போது, பங்கேற்பாளர்கள்
ஏ.இ.எஸ்.எல் சிஸ்டம் மற்றும் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத்
தேர்வுகளுக்கு எவ்வாறு தயாரிப்பது, மற்றும் நேரம் மற்றும் மன அழுத்த
மேலாண்மையின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
நிறுவனம் வழங்கும் வெவ்வேறு படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள் பற்றியும்
விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்நிறுவன தலைமை நிர்வாக
அதிகாரி ஆகாஷ் சவுத்ரி ஒரு ஊடாடும் ஊக்க அமர்வுக்கு தலைமை தாங்கினார்,
மேலும் மாணவர்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்ல ஒரு நேர் மறையான
மனநிலையை வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். "மாணவர்கள்
எதிர்மறையை கைவிடுவது மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது
நேர்மறையைப் பின்பற்றுவது கட்டாய மாகும், ஏனெனில் இது வெற்றிக்கான ஒரே
திறவுகோலாகும்'' என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment