Monday, January 13, 2020

அடிமை சங்பரிவாரங்கள்


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக 1973 முதல் 1994 வரை இருந்த பாலாசாஹெப் தியோரஸ் என்றழைக்கப்படும் மதுகர் தத்தாத்ரேய தியோரஸ்.

ஜன சங்கத்திலிருந்து பிரிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1986 ஆம் ஆண்டு  எல்.கே. அத்வானி பாரதிய ஜனதா கட்சியைக் குறித்து கூறும்பொழுது, "1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியுடன் ஒன்றிணைந்த ஜன சங்கத்தின் புதிய வடிவம் தான் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 5, 1980 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி" என்று வெளிப்படையாகவே கூறினார். "பாரதிய ஜனதா கட்சி, ஜன சங்கம் - ஆர்.எஸ்.எஸ்.  அமைப்புகளின் அடிப்படைக் கொள்கைகளை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் தவறான கருத்து என்றும் சுட்டிக்காட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினிடத்தில் ஜனதா கட்சி உறுப் பினர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்ற ஜனதா கட்சியின் தீர்மானங்களில் தான் பா.ஜ.க வின் தோற்றுவாய் அமைந்திருப்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.
பின்னர், ஏன் பா.ஜ.க. நேர்மையான முறையில் ஜன சங்கத்தையே புதுப்பிக்க முயலவில்லை? மாறாக, சங் பரிவார் அமைப்புகே உரித்தான ஏமாற்று முறையை தேர்ந்தெடுத்துள்ளது. ஜனதா கட்சியின் பெயரைக் களவுகொண்டு அதில் பாரதிய என்ற அடை மொழியை இட்டு மேலும், காந்திய சோசலிசத்தையும் தனது மய்ய இலக்காக கொண்டுவிட்டது.
எனினும், பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவரும், அக்கட்சியை நல்வழியில் இட்டுச் செல்லக் கூடியவருமாகக் கருதப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் காந்திய சோசியலிசம் என்னும் அந்த இலக்கு கைவிடப்பட்டது.  பின்னர் மே 19, 1986 ஆம் ஆண்டு அத்வானி பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான பின்னர் மதச்சார்பின்மை அல்லது காந்திய சோசலிசத்தை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் கைவிட்டார். இந்திய நாட்டை குறித்த பாஜகவின் தொலைநோக்குப் பார்வை ஹிந்து மத பின்புலத்தை விடுத்து அமையாது. இவ்வாறு அக்கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் மனமார எண்ணுவதற்கும் வாய்ப் பிருக்கிறது.
மும்பையில் வெளிவந்த 'தி டெய்லி' பத்திரிகையின் சிறப்பு செய்தியாளரும், மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகையின் தற்போதைய   ஆசிரியருமான சுமித் சக்கரவர்த்தி யுடனான நேர்காணலில் பங்கேற்று அத்வானி பேசிய கருத்து முழுமையாக 1986 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் தேதி அன்று மெயின் ஸ்ட்ரீம் இதழில் வெளிவந்தது. பாஜகவின் மரபுவழியை நினைவு கூருவதும் மேலும் அக்கட்சியை தோற்றுவித்ததும்  பாஜக மீதான பிடியை தற்போது இறுக்கி வருவதுமான ஆர்எஸ்எஸின் மர பணுவை கூர்ந்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. பாரதிய ஜனதா கட்சி என்னும் போர்வையில் ஜன சங்கத்தை உயிர்ப்பிக்க செய்யக்கூடிய பின்னணியில் உள்ள இரு பொய்களை நினைவு கூருவது இன்றைய தேவையாகிறது.
அதில் ஒன்று, ஜனதாக் கட்சியின் உடனான ஜன சங்கத்தின் வஞ்சகத் தொடர்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் மூலம் ஜனதா கட்சியை கைக்கொள்ள நினைத்தது. ஜன சங்கத்தின் இத்திட்டமானது ஜனதா கட்சியின் சமதர்மவாதியும் பொதுச்செயலாளருமான மதுலிமாயே  அவர்களால் உணரப்பட்டது. அது தொடர்பான முழு மையான செய்திகள் மதச்சார்பின்மைக் கொள்கையில் பற்றுக் கொண்டவரும், அஞ்சாத பத்திரிக்கையாளருமான எஸ்.பி.சிங் அவர்களால் வெளியிடப்படும் 'ரவிவார் ' என்ற இந்தி வார இதழில் 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இள வயதில் அவருடைய திடீர் மரணம் இந்திய பத்திரிகைத் துறைக்கு பேரிடியாக அமைந்தது. ரவிவார் பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் ஆங்கில மொழியாக்கம் ஆகஸ்ட் 8, 2010 ஆம் ஆண்டு ஜனதா இதழில் வெளிவந்தது. ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களால் பம்பாயில் நிறுவப்பட்டு வெளிவந்த அவ்விதழ் அண்மைக் காலங்களாக அவரது சுயநலமற்ற பற்றாளரும், தொண்டருமான டாக்டர். ஜி.ஜி பாரிக் அவர்களால் வெளியிடப்பட்டது. பன்வெல் கிராமத்தை மேம்படுத்துவதற்கு டாக்டர் பாரிக் அவர்கள் மேற் கொண்ட உன்னதமான செயல்பாடுகளை குறித்து லைலா பாவடம் அவர்களால் விவரிக்கப்பட்டுள்ளது.
"மனுபாய் பட்டேல் மூலம் சிறையில் எங்கள் அனைவரிடமும் விநியோகிக்கப்பட்ட கடிதத்தின் வாயிலாகத் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியிலும் உறுப்பினர் களாக இணைவது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உருவாவதற்கு அதிக வாய்ப்பு களை ஏற்படுத்தும்" என்று 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி சவுத்ரி சரண் சிங் அவர்கள் கேள்வி எழுப்பினார் என்ற செய்தியே எங்களுக்கு தெரியவந்தது. அதற்கு விடையளிக்கும் விதமாக அன்றைய ஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓம் பிரகாஷ் தியாகி, புதிதாக தொடங்கப்படவிருக்கும் கட்சி தனக்கான உறுப்பினர் சேர்க்கை எவ்விதத்தில் அமைய வேண்டும் எனக் கருதுகிறதோ அது போன்றே சுயமாக செயல்பட வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமன்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு  பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர் கொண் டுள்ளதால் கலைக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, புதிய கட்சியில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் சேர்க்கை என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகிறது.
சில துணுக்குகள் இவற்றை உறுதிப்படுத்துகிறது. 1976 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி அன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் புதுடில்லியில் கூடி னர். அச்செய்தியின் 4ஆவது பாராவில்  ஆர்.எஸ்.எஸ். தொடர்பான கேள்வியை எழுப்பிய சவுத்ரி சரண்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எந்தவொரு தொண்டரும் புதியதாக அமை யவுள்ள கட்சியில் சேருவதற் கும், புதியதாக அமையவுள்ள கட்சி உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரு வதும் கூடாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததை வெளிப்படுத் தியிருக்கிறார். இரட்டை உறுப்பினர் பதவி வகித்தலை அனுமதிக்கக் கூடாது; மேலும் புதிய கட்சியில் எவ்வகையிலும் மறைமுகமான வேலைகள் நிக ழக்கூடாது. அது ஒரு நேரடி யான சவால். ஜன சங்கத்திற்காக ஒ.பி. தியாகி இவ்வாறு பேசு கிறார்:  புதிய கட்சி தனக்கு எவ்விதமான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கருதுகிறதோ அதையே விதிக்கலாம். தற்சமயம் ஆர்.எஸ்.எஸ் அமைப் பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கலைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. (திரேந்திர சர்மா (ஆர்.): தி ஜனதா பீப்பிள்ஸ் ஸ்ட்ரக்கிள்; எ பிலாசபி அண்ட் சோசியல் ஆக்ஷன் பப்ளிகேஷன் 1977; பக்கம் 305).
மன்னிப்புக் கோரி தியோராஸ் கடிதம்
1977 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியது. ஆனால் இன்று மறந்துவிட்ட இன்னும் மிகப்பெரிய மோசடியை குறித்து லிமாயே குறிப்பிட்டார்.  நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா காந்தி அவர்களின் மன்னிப்பைக் கோரியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்கக் கோரியும், தன்னையும் தன் அமைப்பின் தொண்டர் களையும் விடுவிக்கக்கோரியும் மிகுந்த பணிவுடன் சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மதுக்கர் தத்தாத்ரேய தியோரஸ் ரகசியமாக, நம்பிக் கையற்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டார். ஜன சங்கத்தின் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி மற்றும் பலர் கைதானதும், தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்ததையும் பொது மக்கள் அறிந்திருக்கக்கூடும். எனினும், மேற்குறிப்பிட்ட கீழ்மையான பின்னணிகள் குறித்து மிகச் சிலரே அறிந்திருக்கக்கூடும்.
"சிறையிலிருந்த தருணத்தில் இவர்கள் மன்னிப்புக் கோரி மன்றாடியிருக்கின்றனர். மக்களவைத் தேர்தல் தொடர்பான ராஜ் நரேன் வழக்கில் இந்திரா காந்திக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது இந்திரா காந்தி அவர்களுக்கு தியோரஸ் வாழ்த்து கூறியுள்ளார். எனவே இவர் போன்ற நபர்கள் கூறும் சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை"  என லிமாயே கூறினார்.


ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் அத்வானி ஆகியோருடன் மொரார்ஜி தேசாய் (இடப்புறம்) 1977. ஜனதா கட்சியுடன் 1977ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இணைந்திருந்தாலும் ஒருபோதும் பாரதிய ஜனதா, ஜன சங்கத்திலிருந்து தனது உறவை முறித்துக் கொள்ளவில்லை என்று அத்வானி தெளிவாக கூறினார்.
வழக்கில் நீதிமன்றத்தால் இந்திரா காந்தி அவர் களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அந்த வெற்றி நியாயங்களின் அடிப்படையில் அமைந் தது அல்ல. தனக்கு சாதகமான வகையில் இந்திரா காந்தி அவர்கள் தேர்தல் சட்டத்தை முன்மேவுத் தன்மை (Retrospectively)  என்னும் அடிப்படையில் மாற்றியமைத்ததே முழுக் காரணமாக அமைந்தது. அதுவே அலகாபாத் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜக்மோகன் லால் சின்ஹா அவர்களால் இந்திராகாந்தி அவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமைவதற்கு சரியான காரணமாக அமைந்தது. அதன் அடிப்படையிலேயே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இல் பிரிவு 8A சேர்க்கப்பட்டது. இத்தகைய நடுநிலைமையான தீர்ப்பை பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் கடுமை யான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி அவதூறு செய்தது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.  இதற்கு ஒரு எடுத் துக்காட்டே போதுமானதாக அமையும். மேற்குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அவ்வழக்கின் சாட்சி யங்களான மூவருடைய - இந்திரா காந்தி, அவருடைய முதன்மைச் செயலாளர் மற்றும் நெருங்கிய ஆலோசகர் பி.என் ஹக்சார் மற்றும் அவரது குடும்ப பணியாளர் யாஷ்பால் கபூர் ஆகியோர் அளித்த உறுதிமொழியின் உண்மைத்தன்மையில் நம்பிக்கை இல்லாமல் ஏற்க மறுத்தார். ஏற்க மறுத்ததோடு அல்லாமல் யாஷ்பால் சாட்சியத்தை கடுமையாகவும், ஹக்சாரின் சாட்சியத்தை சற்று மிதமாகவும், இந்திரா காந்தியை நிதானமான முறையிலும் கண்டித்து நிராகரித்தார். அத்தகைய நீதிபதி போற்றப்படாமலேயே மறைந்தார்.
1979ஆம் ஆண்டு லிமாயே அவர்களால் வெளியிடப்பட்ட சுருக்கமான பதிவு அதற்கு முன்னர் வெளியான இரு முழுமையான அதிகாரப்பூர்வ குற்றம் சாட்ட முடியாத தரவுகளின் அடிப்படையில் அமைந்தது. அதில் ஒன்று, தியோரஸ் அடைக்கப்பட்டிருந்த  எரவாடா சிறையில் இருந்த சமதர்மவாதியும்; பூனா தொழிலாளர் சங்கத் தலைவரும்; நேர்மையானவருமான பாபா அதாவ் அளித்த சாட்சியாக இருந்தது. அவர் கண்ணால் கண்ட சாட்சியங்கள் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த சர்குலர் டெமாக்ரசி இதழிலும் 1979 ஆம் ஆண்டு  செப்டம்பர் 16ஆம் தேதி ஜனதா இதழிலும் வெளியானது. எரவாடா மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் காரியத்தை மேற்கொள்ள அவர்கள் தயாராக இருக் கிறார்களா? என்ற வகையிலான கேள்விகள் அடங்கிய தாள் மூன்று, நான்கு முறை அங்கு வலம் வந்தது.   ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அவர் களுக்கு அளிக்கப்படும் காரியத்தை மேற்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாக சம்மதித்து அத்தாளில்  கையெழுத்திட்டதை நான் நேரடியாகவே கண்டேன். (ஜனதா இதழ் செப்டம்பர் 16, 1979). அரசியலில் சஞ்சய் காந்தியின் வருகையை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்ற (டிசம்பர் 21, 1975) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஓர் அங்கமான பஞ்சன்யா அவரை ஒன்றிற்கு இருமுறை பாராட்டவும் செய்திருக்கிறது. அதையே பூனாவைச் சேர்ந்த தருண் பாரத் அவர்களும் கையாண்டார்.
(தொடரும்)

நன்றி:   Frontline   (ஆகஸ்ட் 21, 2015)

தமிழில்:  அ.சி. கிருபாகரராஜ்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...