திருமண செலவுக்கு பணம் இல்லாததால்,
செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டி லிடம், உதவி
கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார்.
பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது. அஞ்சுவுக்கு, 10
சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட் களும், ஜமாத் சார்பில்
வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்
திலேயே, இந்து மத முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், இந்து முறைப்படி, திருமணம் நடந்தது.
இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
முகநூல் சமூக வலைதளத்தில், அவர்
வெளியிட்டுள்ள பதிவில், 'மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும்
முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் மகிழ்ச்சியளிக்கிறது' என
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment