குடியுரிமைத் திருத்தச் சட்டம்:
“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”
பாகிஸ் தான், வங்காளதேசம், ஆப்கா னிஸ்தான்
ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல் களால் பாதிக்கப்பட்டு, இந்தி
யாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத் தவருக்கு இந்தியாவில்
குடி யுரிமை அளிக்க வகை செய்யப் பட்டுள்ளது.
இதற்காக மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், மத ரீதியில்
பாரபட்சத்தை கொண் டுள்ளதாக கூறி காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட் சிகள்
எதிர்த்து வருகின்றன.
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங் களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நியூயார்க் நகரில்
‘மைக்ரோசாப்ட்’ நிறு வனம் நேற்று நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு மத்தியில்,
அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியரு மான சத்ய நாதெள்ளா
(வயது 52), பத்திரிகை ஆசிரியர்களி டம் பேசினார்.
அப்போது அவரிடம் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கருத்தை தெரி விக்குமாறு கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது
என்பது வருத்தம் அளிக்கிறது. நான் வெளிப்படையாக இந் தியாவில் தான்
வளர்ந்தேன். அங்கிருந்து தான் நான் என் பாரம்பரியத்தை, கலாச்சா ரத்தை
பெற்றேன். நான் வளர்ந்த நகரம், வளர் வதற்கு ஒரு சிறந்த நகரம் என்று
எப்போதும் நான் உணர்கி றேன். நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், தீபாவளி
பண்டிகையையும் கொண் டாடி இருக் கிறோம். ஆனால் இப்போது இந்தி யாவில் நடப்பது
வருத்தம் அளிக்கிறது.
உண்மையிலேயே அங்கு நடந்து கொண்டிருப்பது
பற்றி வெளிப்படையான தக வல்கள் அளிக்கப்படுகின்றன. 2 அற்புத மான அமெரிக்க
விஷயங்களால் நான் உருவா னேன். ஒன்று தொழில்நுட்பம். மற்றொன்று, வளர்ந்து
வரும் இடத்தையும், அதன் குடி யேற்ற கொள்கையை யும், இது போன்ற ஒரு நாட்டில்
என்னுடையது என்பது போன்ற ஒரு உணர்வும் என்னை வந் தடைகிறது.
ஆனால் இந்தியாவில் நடப்பது மோசமானது.
இந்தியாவுக்கு செல்கிற வங்காளதேசத்தை
சேர்ந்த ஒருவர், இந்தியாவில் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உரு
வாக்குபவராகவோ அல்லது இன்போசிஸ் நிறுவ னத்தின் தலைமை செயல் அதிகாரியாகவோ வர
வேண் டும் என்று விரும்புகிறேன்.
நான் எனது இந்திய பாரம் பரியத்தால் வடிவமைக்கப்பட் டுள்ளேன். பன்முக கலாசாரம் கொண்ட இந்தியாவில் வளர்ந்தேன்.
இந்தியா மீதான எனது நம்பிக்கை
என்னவென்றால், அங்கு குடியேறிச்செல்கிற ஒருவர் வளமான ஸ்டார்ட்-அப்
நிறுவனத்தை தொடங்க வேண்டும் அல்லது பன் னாட்டு நிறுவனத்துக்கு தலைமை தாங்க
வேண்டும். அது இந்திய சமூ கத்துக்கு, பொருளாதாரத்துக்கு பெரு மளவில் பலன்
அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment