Tuesday, January 21, 2020

தற்கொலையில் தமிழகம் இரண்டாம் இடம்

தேசிய குற்றப் பதிவு ஆவணக்காப்பகம் அறிக்கை
அதிர்ச்சித் தகவல்

தற் கொலைகள் நடைபெ றும் மாநிலங்களின் பட் டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருந்து வருகின்றது.
தென்கிழக்கு ஆசியா வில் இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலை கள் நிகழ்கின்றன என்று உலக சுகாதார அமைப் பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அவ்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
2018ஆ-ம் ஆண்டுக்கான, தற்கொலைகள்' குறித்த தேசிய குற்றப் பதிவு ஆவணக்காப்பகத்தின் ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் 1,34,516 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2017ஆ-ம் ஆண்டில் 1,29,887 பேர் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக தற்கொ லைகள் நடை பெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் மகாராட்டிரா மாநில மும், இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையும் அதிகரித் துள்ளன. 2018ஆம் ஆண்டு மட்டும் 401 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...