Tuesday, January 14, 2020

ராமன் எங்கே, கோல்வால்கர் எங்கே, சாவர்கர் எங்கே??

குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மிகவும்  சொற்ப  எண் ணிக்கையிலான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாண வர்கள்  பிரிவு   டில்லி சாலைகளில் ஊர்வலம்  சென்றனர். இவர்கள் தங்களின் ஊர்வலத்தில் இவர் களின் ஆதர்ச நாயகன் என்று கூறப்படும் ராமனின் பதாகைப் படத்தை பயன்படுத்தவில்லை. இவர்களின் கொள்கை நாயகர்கள் என்று கூறிக்கொள்ளும் கோட்சே, சாவர்கர், கோல்வால்கர் போன் றோரின் பதாகைப் படங்களையும் தூக்க வில்லை.
ஆனால் இந்துத்துவா அமைப்பின் பரம கொள்கை எதிரியான பகத்சிங்கும், கடுமையான இந்துத்துவா எதிர்ப் பாளியான பிர்சா முண்டாவும், பார்ப் பனீயத்தை கடுமையாக சாடிய விவேகானந் தரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பல முறை புறக்கணிக்கப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திர போசும் தான் இப்போது இவர்களின் போராட்டத்திற்குப் பயன்படுகின்றனர்.
இதே போல் தான் மோடி_ அமித்ஷாவும் இன்றளவும் காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபாய் படேலை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...