மகாராட்டிர மாநிலம் கோலாப் பூர் பகுதியை
சேர்ந்த டாக்டர் நவ்நாத் டுதால் என்பவர் தனது மகளின் திருமணத்தில் எதையாவது
வித்தியாச மாக செய்ய திட்டமிட்டார். இதற் காக திருமண காரை மாட்டு சாணத்
தால் 'கோட்டிங்' கொடுத்துள்ளார். இந்த காரை திருமணத்திற்கு வந்தி ருந்த
அனைவரும் ஆச்சரியமாய் பார்த் தனர். மகள் மற்றும் மருமகனை அந்த காரிலேயே
அழைத்து வந்து, திரு மணமும் நடத்தி வைத்துள்ளார். இதற்கு நவ்நாத் டுதால்
வெளியிட்ட காரணங்கள் மேலும் ஆச்சரியப் படுத்தின.
அதாவது மாட்டு சாணத்தின் நன் மைகளை
மற்றவர்களுக்கு உணர்த்துவ தற்கும், அதன் பயன்பாட்டை பிரபலப்படுத்து
வதற்கும் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், உலக
வெப்பமய மாதலின் ஆபத்துகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுற்றுச்சூழலை
பாதுகாப்பதில் பசுக்களின் பங்கு முக்கியமானது. மாட்டு சாணத்தால் கேன்சரை
குணப்படுத்த முடியும் மற்றும் மனித உடலில் இருந்து நோய்களை அகற்றும் திறன்
உள்ளது. காரில் மாட்டு சாணத்தால் 'கோட்டிங்' செய்தால், கார் கேபினின்
வெப்பநிலை குறையும் என்பதால் இவ்வாறு செய்தேன். இது கைப் பேசிகளது
கதிர்வீச்சில் இருந்தும் காப்பாற்றும், என்றார்.
No comments:
Post a Comment