Monday, January 13, 2020

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாகாலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இடைநீக்கம்

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளித்த நாகா லாந்து மக்கள் முன்னணி எம்பியை அக்கட்சி இடைநீக்கம் செய் துள்ளது. நாகாலாந்தில் உள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி மாநிலங்களவை உறுப்பினரான கென்யே நாடாளுமன்றத்தில் சிஏஏ வுக்கு ஆதரவாக வாக்களித்தார். அவரது இந்த செயல், அவர் சார்ந்த நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோகிமாவில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான நகல்களும் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் கூறப்பட்டதாவது:  சிஏஏவுக்கு ஆதர வாக வாக்களித்தது பற்றி கென்யேவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அளித்த விளக்கத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மத்திய கமிட்டி முன்பும் வைக்கப்பட்டது. சிஏஏவுக்கு ஆதரவாகவும், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும் செயல் பட்டீர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் இடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...