நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை
மத்திய அரசு வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த முடிவு செய்
துள்ளது. இதற்கான ஆலோ சனை கூட்டம் ஒன்றும் சமீ பத்தில் டில்லியில் நடத்தப்
பட்டது.
ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு
தயாரிப்பது, என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்
புக்கான முன்னோடி நடவ டிக்கை எனக்கூறி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இந்த
என்.பி.ஆர். நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய அரசின்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும்
கேரளாவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் என்.பி. ஆர். நடவடிக்கைகளுக்கு தடை
விதிப்பதாக சமீபத்தில் அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக மாநில
அமைச்சரவை சிறப்பு கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.
முதல்அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில்
நடந்த இந்த கூட்டத்தில், கேரளாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும்
பணிகளை மேற் கொள்வது இல்லை என முடிவு எடுக்கப்பட்டது.
எனினும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
மாநில அரசின் இந்த முடிவை மத்திய பதிவாளர்
மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கும், மாநில மக்கள் தொகை கணக்
கெடுப்பு இயக்குநருக்கும் தெரி விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பின்னர் இது தொடர் பாக முதல்-அமைச்சர் அலுவல கத்தில் இருந்து அறிக்கை ஒன்று
வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
என்.பி.ஆர். நடவடிக்கைகள் மூலம் தேசிய
குடிமக்கள் பதி வேடு (என்.ஆர்.சி.) தயாரிப்புக்கு வழி ஏற்படுகிறது. இது
அமல் படுத்தப்பட்டால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்ற அச்ச உணர்வு
மக்களிடையே நிலவு கிறது. மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நட
வடிக்கைகளை மேற்கொண் டால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப் படும் என காவல்துறைத்
தரப்பில் இருந்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளால்
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையும் முடங்கும் என மாவட்ட ஆட்சியர்களும்
அறிக்கை அளித்து உள்ளனர்.
மாநில மக்களுடைய இத்தகைய அச்சத்தை போக்கி,
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டிய அரசியல் சாசன கடமை
அரசுக்கு இருக்கிறது. எனவே என்.பி.ஆர். நடவடிக்கைகளை மாநிலத்தில்
மேற்கொள்வது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment