Tuesday, January 21, 2020

உள்ளாட்சித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி


ஊரக உள் ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக் கையில் முறைகேடு நடைபெற்ற பகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும், தள்ளி வைக்கப் பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் 10 ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தக் கோரியும் தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்திய நாராயணன் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்த ரேசன் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ‘சேலம் உள்ளிட்ட பல் வேறு ஒன்றியங்களின் தேர்தல் முடி வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, தி.மு.க. தொடர்ந் துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த பதில் மனுவில், ‘போதிய கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலுக்கு வராததால் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சில தேர்தல் அதிகாரிகளுக்கு திடீ ரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக 10 ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக் கைகளை தேர்தல் அலுவலர்கள் தான் பரிசீலிப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட தி.மு.க., தரப்பு மூத்த வழக் குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ‘மறைமுகத்தேர்தலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட் டத்தில் நடந்த தேர்தலின் போது காவல்துறை துணை கண்காணிப்பா ளர் வெங்கடேசன் என்பவரை அ.தி. மு.க., பிரமுகர் ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளார்’ என்று வாதிட் டார்.
இதையடுத்து நீதிபதி, தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட கண் காணிப்பு கேமரா பதிவுகள் பாது காப்பாக உள்ளதா? அவை தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள் ளது? கண்காணிப்பு கேமரா பதிவு களில் முறைகேடு செய்யப்படாது என்பதற்கு மாநில தேர்தல் ஆணை யம் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் மூத்த வழக்குரைஞர், ‘கண்காணிப்பு கேமரா பதிவுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது வரை அந்த பதிவுகளை ஆய்வு செய்ய வில்லை’ என்று பதில் அளித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...