இதுகுறித்து தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
5ஆவது ஹைட்ரோ கார்பன் திட்டம் கடலோர
பகுதிகளில் செயல் படுத்தப்பட்டால் மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடி
தொழில் செய்ய முடியாது. எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தா
விட் டால் ஒட்டுமொத்தமாக இணைந்து போராட்டம் நடத்த திட்டம் வகுத்து
வருகிறோம் என்றனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட் டமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:
5ஆவது சுற்று ஏலத்தில் காவிரிப்படுகையில்
4064.22 ச.கி.மீ பரப்பளவை பன்னாட்டு முதலா ளிகள் கைப்பற்ற இருக்கிறார்கள்.
காவிரிப்படுகையையும், அதை யொட்டிய கடற்பகுதியையும் ஒட்டு மொத்தமாக அழிக்க
இருக்கின் றனர். காவிரிப்படுகை பாதிப்புக் குள்ளானால் டெல்டா மாவட் டத்தில்
10 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்து உள்நாட் டிலேயே அகதிகளாக
நேரிடும். இத்திட்டத்தை கைவிடா விட்டால் போராட்ட களத்தில் குதிக்க நேரி
டும் என்றார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண் டியன் கூறுகையில்,
ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க
நாடுமுழுவதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ, பொதுமக்கள்
கருத்து கேட்பு கூட்டமோ தேவையில்லை என மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி
அரசிதழிலும் வெளியிட்டிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. இதை
வன்மையாக கண்டிப்பதோடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒன்று திரண்டு
போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment