'வரும், 2025ஆம் ஆண்டுக்குள், கப்பல் களின் எண்ணிக்கை, 200; விமானங்களின் எண்ணிக்கை, 100 ஆக உயர்த்துவதே இலக்கு,'' என, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக் குனர் கே.நடராஜன் தெரிவித்தார்.
இந்தியா - ஜப்பான் நாடுகளுக் கிடையே,
2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இரு நாட்டுக் கடலோரக் காவல்
படைக்குச் சொந்தமான கப்பல்கள், ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சியில்
ஈடுபட்டு வருகின்றன.
இரு நாட்டு கடலோர காவல் படை வீரர்கள்,
சென்னை யிலிருந்து, 15 கடல் மைல் துரத்தில், கடலுக்குள், நேற்று கூட்டுப்
பயிற்சியில் ஈடுபட் டனர்.
ஒத்திகை நிகழ்ச்சிக்கு பின், கே.நடராஜன்
மற்றும் டககிரோ ஒகுஷிமா அளித்த பேட்டி: இந்திய கடலோர காவல் படையில், துவக்
கத்தில், 45 கப்பல்களும், 40 விமா னங்கள் மட்டுமே இருந்தன. இது தற்போது,
145 கப்பல்கள், 62 விமானங்களாக அதிகரித்துள் ளன. இதேபோல, 60 இலகு ரக ஹெலி
காப்டர்கள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. 14 இரட்டை இன்ஜின்கள்
பொருத் திய கனரக ஹெலிகாப்டர்கள், 15 பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும்
ஹெலிகாப் டர்களும், இந்திய கடலோர காவல் படையில் இணைய உள்ளன. மேலும், 16,
'மாக் 3' ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் ஹெலிகாப்டர், வரும் மார்ச்சில்
சோதனைக்கு உட் படுத்தப் பட உள்ளது. உலக அளவில், இந்தியா, நான்காவது பெரிய
கடலோர காவல் படை வைத்துள்ள நாடாக உள்ளது.
விரைவில், மூன்றாவது இடத் திற்கு
முன்னேறும்.வரும், 2025ஆம் ஆண்டுக்குள், கப்பல் களின் எண்ணிக்கை, 200;
விமா னங்களின் எண் ணிக்கையை, 100 ஆக உயர்த்துவதே இலக்கு.
அடுத்த ஆண்டில், பன் னாட்டு அளவில் கடலோர
காவல் படை மாநாடு, இந்தி யாவில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது; அதற்கான
பேச்சு நடந்து வருகிறது. அதில், தேடு தல் மற்றும் மீட்பு தொடர்பான,
பன்னாட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
No comments:
Post a Comment