அஞ்சல் விநியோக வேகம், முன்பை விட அதிகரித்துள்ளது. இதில், தமிழகம், நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லி முதலிடத்தில் உள்ளது.
அஞ்சல் சேவையின், கடந்தாண்டு சாதனைப்
பட்டியலை, அஞ்சல் துறை, சமீபத்தில் வெளியிட்டது. இதில், தபால் விநியோகம்
செய்ய எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் குறைந்துள்ளதாகவும், தாமதமின்றி
விரைவிலேயே விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைந்து,
தபால்களை டெலிவரி செய்யும் மாநிலங்களில், முதலிடத்தில், டெல்லி - 46 மணி
நேரம், உள்ளது. இரண்டாமிடத்தில் உள்ள தமிழகம், 66 மணி நேரத்திற்குள்
டெலிவரி செய்கிறது.கர்நாடகா - 74, மஹாராட்டிரா - 84, மத்திய பிரதேசம் - 85
மணி நேரம் என, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தெலுங்கானா - 112, அசாம் -
118, ஆந்திரா - 121, ஜம்மு காஷ்மீர் - 122, ராஜஸ்தான் - 134 மணி நேரம் என,
கடைசி அய்ந்து இடங்களை பெற்றுள்ளன. நாடு முழுவதும், ஒரு அஞ்சல்,
சராசரியாக, 82 மணி நேரத்திற்குள் உரியவருக்கு டெலிவரி செய்யப்படுவதாக,
அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
அஞ்சல் துறை கண்காணிப்பாளர்
பாலசுப்ரமணியன் கூறியதாவது: தற்போது, டிஜிட்டல் கையடக்க கருவி,
அஞ்சல்காரர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. முன்பு ஒரு நாளில் அஞ்சல்கள்
விநியோகம் செய்யும் விபரங்களை, மாலைக்குள், அந்தந்த அஞ்சல் நிலையங்களில்
உள்ள கணினியில் அஞ்சல்காரர் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது, கையடக்க
கருவியிலேயே, விநியோகம் செய்த இடத்தில் இருந்தே நேரடி யாக
பதிவேற்றப்படுவதால், நேரம் மிச்சமாகிறது, இதுவே, விரைவாக விநியோகம் செய்ய,
முக்கிய காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்
No comments:
Post a Comment