Friday, January 17, 2020

வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு அய்ந்து நாள் வேலை உட்பட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜன. 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட உள்ளனர்.
வங்கிகளை தனியார் மயமாக்கவோ இணைக்கவோ கூடாது; வைப்புத் தொகை களுக்கான வட் டியை அதிகரிக்க வேண்டும்; வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது.இதில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்ட மைப்பு உட்பட அய்ந்து சங்கங்கள் பங்கேற்றன. இதனால் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த் தனைகள் பாதிக்கப்பட்டன.தற்போது  இரண்டு நாள்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதா வது:
ஊதிய உயர்வு, வாரத்தில் அய்ந்து நாள் வேலை, புதிய ஓய்வூதிய, திட்டத்தை ரத்து செய்தல், குடும்ப ஓய்வூதியத்தில் மேம் பாடு, வங்கி அதிகாரிகளுக் கான வேலை நேரத்தை வரையறுத்தல் உட்பட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜன. 31 மற்றும் பிப். 1ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...