Friday, January 17, 2020

அன்று ஜெ.என்.யு. - இன்று சாந்திநிகேதன் மாணவர்கள்மீது ஆர்.எஸ்.எஸின், ஏபிவிபி வன்முறை துணைவேந்தர் துணையுடன் நடந்த காலித்தனம்


மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிற்கு அரு கில் உள்ள சாந்திநிகேதனின் தாகூர் துவக்கிய பல்கலைக் கழகமான விசுவபாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத் திலும் இந்துத்துவ அமைப்பினர் மாணவர்களை கொடூரமாக தாக்கி யுள்ளனர். இதில் ஒரு மாணவருக்கு மார்பெலும்புகள் முறிந்து மருத்துவ மனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 5.1.2020 அன்று ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர்கள் தாக் குதல் நடத்தினர். இதில் 13க்கும் மேற் பட்ட மாணவர்கள் படுகாயமடைந் தனர். இந்த விவாதம் அடங்கும் முன்பே மீண்டும் இந்துத்துவ அமைப்பினர் தங்கள் வன்முறை முகத்தை மேற்குவங்கத்திலும் காட்டியுள்ளனர்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன தாஸ் குப்தா மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். இதற்கு இடதுசாரி அமைப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஸ்வப்னதாஸ் குப்தாவின் பேச்சின் போது எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் விடுதியில் படித்துக்கொண்டு இருந் தனர். அப்போது பயங்கர ஆயுதங் களுடன் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இந்த தாக்கு தலில் சுவப்பனில் முகர்ஜி என்ற மாணவர் கடுமையாக தாக்கப் பட்டார். இவரது மார்பெலும்புகள் உடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இது தொடர்பாக, தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறும் போது, அறையில் சில மாணவர்கள் படித்து கொண்டு இருந்தனர். திடீரென்று கூச்சல் கேட்டது நாங்கள் சென்று பார்த்த போது 15-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்த இந்துத் துவ அமைப்பைச்சேர்ந்தவர்கள் மாணவர்களை அடித்தனர். தட்டிக் கேட்கச் சென்ற என்னையும் தாக்கினர்.  காலில் கம்பிகளைக் கொண்டு தாக்கினர். அதில் பொரு ளாதாரம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ரத்த வெள்ளத்துடன் மயங்கி விழுந்தார்.
இது தொடர்பாக, நாங்கள் பல் கலைக்கழக பாதுகாவலர்களுக்குத் தகவல் கொடுத்தோம் ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் வர வில்லை. இதனை அடுத்து மாண வர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடத் தொடங்கி விட்டோம். தாக்குதலுக்கு இலக்கான அனுகசுக் முகர்ஜி என்ற மாணவர் கூறும் போது எங்களைத்தாக்கியவர்கள் நீண்ட நாட்களாகவே பல்கலைக் கழக நிர்வாகத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். தாக்கு தலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரான பகாடி என்பவர் பல் கலைக்கழக துணைவேந்தர் பித்யூத் சக்ரோபர்த்தியுடன் மிகவும் நெருக் கமானவர். சில நாட்களுக்கு முன்பு பவுசா மேளா என்ற நிகழ்ச்சியின் போது தாக்குதலில் ஈடுபட்ட பலர் துணைவேந்தருடன் இருந்தனர் என்று கூறியிருந்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் பல் கலைக்கழக மாணவர்களை மருத் துவமனையில் சேர்க்கக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் தாக்குதல் தொடர்பான காட்சிகள் மிகவும் பதற வைப்பவையாகவும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகமே துணை போனதும் தெளிவாக தெரிகிறது. சிசிடிவி காட்சியில் பகாடி மற்றும் சுதிப் பாசு தலைமையில் பலர் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழை கின்றனர். பாதுகாவலர்கள் அவர் களிடம் என்னவென்று கூட கேட்கவில்லை. சிலர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று பிறகு தாக்குதல் நடத்த விடுதி இருக்கும் பகுதிக்கு வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு தாக்குதல் நடந்ததில் தொடர்பு உள்ளது என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் ஏபிவிபி மாண வர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பகாடி முன்பு எங்கள் அமைப்பில் இருந்தவர் அதன் பிறகு அவர் எங்கள் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டார். இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. எங்கள் அமைப் பின் பெயரை  களங்கப்படுத்த வேண்டுமென்றே பகாடி போன்ற வர்களை எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களாக தொடர்ந்து ஊடகங்கள் எழுதி வருகின்றன. இது தொடர்பாக நாங்கள் பல் கலைக்கழக நிர்வாகத்திடம் விளக் கியுள்ளோம் என்று சமாளித் தனராம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...