நாடு முழுவதும், அரசு மற்றும் சுயநிதி
பல்கலைகளில், 'ரெகுலர்' படிப்புடன், தொலைநிலையிலும் படிப்புகளை நடத்த
அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. 'ரெகுலர்' படிப்புகளுக்கு இணையாக, தொலைநிலை
படிப்புகளுக்கு, கல்வி தகுதி அளிக்கப்படும் என, பல்கலை மானிய குழுவான,
யு.ஜி.சி., ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால், பல மாநிலங்களில், பல
துறைகளில், 'ரெகுலர்' படிப்பு முடித்தவர்கள் மட்டுமே, பணியில்
சேர்க்கப்படுகின்றனர். தொலைநிலை கல்வி படித்த வர்களுக்கு, பணி நியமனம்
மற்றும் பதவி உயர்வில், அனுமதி அளிக்கப் படாத நிலையும் உள்ளது. அதனால்,
தொலைநிலை கல்வியில் படிக்க, பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, தொலைநிலை கல்வியில்
சேருவோர் எண் ணிக்கை, நாள்தோறும் குறைந்த வண்ணம் உள்ளது. இதை மாற்றும்
வகையில், தொலைநிலை கல்வியில் மாணவர்களை சேர்க்க, கூடுதல் நாட்கள் அனுமதி
அளித்து, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.'காலண்டர்' ஆண்டு எனப்படும், ஜனவரி
முதல் டிசம்பர் வரையிலான பருவத்தில், ஜனவரி மாதம் மாணவர் சேர்க்கை
துவங்கினாலும், பிப்ரவரி இறுதி வரை, மாணவர்களை சேர்க்கலாம் என,
கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 'அகடமிக்' எனும் கல்வி ஆண்டில்,
ஜூலையில், மாணவர் சேர்க்கை துவங்கினாலும், செப்டம்பர் இறுதி வரை, மாண
வர்களை சேர்க்கலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கடைசி
தேதி முடிந்ததும், 15 நாட்களில், சேர்க்கை விபரங் களை, கல்வி நிறுவனங்கள்
தெரிவிக்க வேண்டும் என்றும், யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment