பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை
மேம்பாட்டு துறையில், புதிதாக பதிவு செய்யப்பட்ட, 505 தொடக்க பால் உற்பத்தி
கூட்டுறவு சங்கங்கள், அய்ந்தாண்டுகள் பதவி நிறைவுறும், 517 தொடக்க பால்
உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மேலும், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில்
உள்ள, நான்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள்; இரண்டு மாவட்ட கூட்டுறவு
அச்சகங்கள் என, மொத்தம், 1,028 கூட்டுறவு சங்கங்களுக்கு, தேர்தல் நடத்தப்பட
உள்ளது. இந்த சங்கங்களில், 11 ஆயிரத்து, 368 நிர்வாகக்குழு உறுப்
பினர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்ய, தமிழ்நாடு மாநில கூட்டுறவு
சங்கங்களின் தேர்தல் ஆணையம், தேர்தலை அறிவித்துள்ளது.நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் பதவியில், 3,102 இடங்கள் பெண்களுக்கும், 2,068 இடங்கள்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்பதவிகளுக்கு, வரும், 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கும்.
மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
மனுவை திரும்ப பெற விரும்புவோர், 29ஆம்
தேதி மாலை, 4:00 மணிக்குள், திரும்பப் பெறலாம். இறுதி பட்டியல், 29ஆம் தேதி
மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்படும். போட்டி இருந்தால், பிப்., 3இல்
ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, பிப்., 4இல் நடக்கும்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்,
பிப்ரவரி, 8இல், சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் என,
தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment