Monday, January 13, 2020

பசுவை தொட்டால் தோஷங்கள் விலகுமாம் கூறுகிறார் மகாராட்டிரா அமைச்சர்

மகாராட்டிரா அமைச்சர் யஷோமதி தாக்கூர், பசுவை தொட்டால் தோஷங்கள் விலகும் என்று மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். மகாராட் டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் பெண்கள் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் யசோமதி தாக்கூர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அமராவதி மாவட்டம் தியோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
நேற்று அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, ‘‘பசுவை தொட்டால் தோசங்கள் விலகிவிடும் என்று நமது கலாச்சாரம் சொல் கிறது’’ என்று யசோமதி தாக்கூர் கூறினார். அவருடைய இந்த கருத்து சர்ச் சையை ஏற்படுத்தி இருக்கிறது. முன்ன தாக ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுக்கூட் டம் ஒன்றில் பேசுகையில், “நாங்கள் இப் போதுதான் ஆட் சிக்கு வந்தி ருக்கிறோம். எங்கள் பாக்கெட் இன்னும் நிரம்பவில்லை" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...