தன்னை ஒரு இந்து மாணவர் அமைப்பான ஏபிவிபி
என்று அடையாளப்படுத்தி, ஜனவரி 5ஆம் தேதி, ஜேஎன்யூ வளாகத் தாக்குதலில் தனது
பங்கை ஒப்புக்கொண்ட அக்ஷத் அவஸ்தி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக
வளாகத்திற்குள் வன்முறைசெய்ய இறங்கிய போது டில்லி காவல்துறையினர்
விளக்குகளை அணைத்ததாகக் கூறியுள்ளார்.
ஜே.என்.யூ.வில் தாக்குதல் நடத்தியவர்களை
கண்டுபிடிப்பதற்கான 'இந்தியா டுடே'யின் இரகசிய ஆய்வு நடவடிக்கையில்,
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) பெரியார் விடுதி மீது
தாக்குதல் நடத்தியதாகக் கூறி இடதுசாரி மாணவர்களை அடித்து உதைக்க கடமையில்
இருந்த ஒரு காவல் அதிகாரி வன்முறை கும்பலை ஊக்குவித்ததாக அக்ஷத் அவஸ்தி
கூறியுள்ளார்.
"அவர்களை அடியுங்கள், அவர்களை அடி
யுங்கள் ஜே.என்.யூ விடுதிகளில் மாணவர்கள் மற் றும் ஆசிரியர்களைத் தாக்க
கடமையில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி கும்பலை ஊக்குவித்தது இப்படித்தான்"
என்று ஏபிவிபி ஆர்வலர் ஒருவர் கூறினார். அக்ஷத் அவஸ்தியும் ஜனவரி 5 ஆம்
தேதி வளாகத்திற்குள் மற்றும் வெளியே இருந்தும் கும்பலை அணிதிரட்டியதாக
ஒப்புக்கொண்டார்.
அக்ஷத் அவஸ்தி ஜே.என்.யூவில் பிரெஞ்சு
பட்டப்படிப்பின் முதல் ஆண்டு மாணவர் ஆவார், அவர் 5ஆம் தேதி நடந்த
தாக்குதலின் காட்சிகளிலும், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி)
ஆர்வலராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
காவல்துறையினர் வளாகத்திற்குள் இருந்
தார்கள், வெளியே இல்லை என்றும் அக்ஷத் அவஸ்தி கூறினார். இதற்கு முந்தைய
தாக்குதலில் விடுதியில் உள்ள மாணவர் காயமடைந்த போது நானே காவல்துறையினரை
அழைத்தேன். அவர் களோ மனீஷ் என்னும் மாணவனை சந்தித்து, அவர்களை அடி,
அவர்களை அடி என்று கூறியதாக அவஸ்தி தெரிவித்தார்.
'இந்தியா டுடே'யின் விசாரணைக் குழு
காவல்துறையினர் என்ன சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ளக் கேட்டபோது,
அவர்களை அடியுங்கள் என்று கூறியதாக அக்ஷத் அவஸ்தி கூறினார். ஜே.என்.யூ
தாக்குதல் நடந்த நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள்
குறித்தும் அக்ஷத் அவஸ்தியிடம் கேட்கப்பட்டது இதன் மூலம் டில்லி ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்ட வர்களுக்கு டில்லி காவல்துறை உதவி
செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் டில்லி காவல்துறை தாக்குதலுக்கு
இலக்கானவர்கள் மீதே வன் முறையில் ஈடுபட்டதாக கூறி முதல் தகவல் அறிக்கை
தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
No comments:
Post a Comment