சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த
2013ஆம்ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது
மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ராமன்சிங் இருந்தார். அவருக்கு
உதவியாளராக ஓ.பி.குப்தா என்பவர் பணியாற்றி வந்தனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற
சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை
கைப்பற்றியது. மாநில முதல்வராக பூபேஷ் பாகல் உள்ளார். இந்த நிலையில் கடந்த
2015ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ் குப்தா என்கிற ஓபி குப்தாவின் வீட்டில் வேலைக்கு
சேர்ந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமி
புகார் கொடுத்துள்ளார். தான் 14வயதில் வேலைக்கு சேர்ந்ததாகவும் தற்போது
16 வயதாகும் நிலையில் , கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு குப்தா பாலியல் ரீதியிலான
தொல்லை கொடுத்து வருவதாகவும், குப்தாவின் மனைவி வீட்டில் இல்லாத
நேரத்தில், குப்தாவுக்கு மசாஜ் செய்யும்படி வற்புறுத்திய தாகவும்,
இதுகுறித்து வெளியே சொன்னால், கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும்
காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பிய
நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஓபி குப்தாவை,
போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment