Saturday, January 11, 2020

விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன்

''கோழி, மீன், பால் பண்ணைகளை பராமரிக்க, இந்த ஆண்டு முதல், 4 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது,'' என, சிண்டிகேட் வங்கி பொது மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
தேனியில், சிண்டிகேட் வங்கி சார்பில், விவசாயிகள் கருத்தரங்கு, செயல் இயக்குனர் நாகேஸ்வர ராவ் தலைமையில் நடந்தது. பொது மேலாளர் மணிவண்ணன் பேசியதாவது: விவசாயத்தில் இருமடங்கு மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கில், உதவ வங்கிகள் முன் வந்துள்ளன. மஹாராட்டிராவில், கரும்பு சாகுபடியில் சொட்டு நீர் பாசனத்தை பின்பற்றுகின்றனர்.
தமிழகத்தில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். உலகமயமாக்கலுக்கு ஏற்ப, விவசாயத்தில் தொழில்நுட்பங்களை கையாள வேண்டும். வங்கிகளில், 10 சதவீத அளவே, விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் தான், லாபம் பெற முடியும். தொழில் வளர்ச்சியாக, கோழி, ஆடு, மாடு வளர்ப்பில், பராமரிப்புக்காக, 4 சதவீத வட்டியில் கடன் வழங்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...