Saturday, January 11, 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (10.1.2020) இரவு அறிவித்தது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியி லான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறை வேறியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின், இது சட்டமானது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலை யில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...