Tuesday, December 31, 2019

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஓ.டி.பி., அவசியம்

மோசடிகளை தடுக்கும் விதமாக, அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக, எஸ்.பி.அய்., என்ற, பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை, எஸ். பி.அய்., அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து, எஸ்.பி.அய்., வெளியிட்ட அறிவிப்பு: ஏ.டி. எம்., இயந் திரத்தில் நடக்கும், சட்ட விரோத பணப் பரிவர்த் தனையை குறைக்கும் விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு, ஒரு முறை ரகசிய எண்ணை பயன்படுத்தும் திட்டத்தை, நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இரவு, 8:00 முதல் காலை, 8:00 மணி வரை, இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண், வாடிக்கை யாளர்களின் பதிவு செய்யப் பட்ட, மொபைல் போன் எண்ணிற்கு வரும்.
இது, சட்ட விரோத பணப் பரிவர்த் தனைகளில் இருந்து, ஏ.டி.எம்., வாடிக்கையாளர் களை பாது காக்கும்.
ஜன., 1 முதல், நாடு முழுவதும், இது செயல்பாட்டிற்கு வரு கிறது.
ஆனால், எஸ்.பி.அய்., வாடிக்கையாளர் கள், இதர வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்தால், இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.
இவ்வாறு, அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...