மத்தியஅரசு கொண்டு வந்த என்ஆர்சி
சட்டத்திருத்தத்தைத் தொடர்ந்து, அப்போதைய பட் நாவிஸ் தலைமையான பாஜக மாநில
அரசு, மாநிலத்தின் நெருல் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குடி
யேறியவர்களுக்கான முதல் தடுப்பு மய்யத்தை ஏற்படுத்தி இருந்தது. இதை
அபிவிருத்தி செய்யவும் பட் நாவிஸ் அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், நவி மும்பையின் நெருலில் மாநிலத்தை
முதலில் அபிவிருத்தி செய்வதற்காக அமைக் கப்பட்டிருந்த முந்தைய கூட்டணி
முதல்வரான தேவேந்திர ஃபட்ன விஸின் முடிவை அதிரடியாக ரத்து செய்தார்.
என்ஆர்சி விவகாரம் தொடர் பான வழக்கு
உச்சநீதி மன்றத்தில் நிலுவையில்உ ள்ளது. வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம்
தேதி மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.
அதன் முடிவைத்தொடர்ந்து, மா நிலத்தில்
என்.ஆர்.சி.யை நிறை வேற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தனது அரசாங்கம்
முடிவு செய்யும் என்று தாக்கரே கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ)
மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றில் நாடு
கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வரும் தாக்கரேவின் முடிவு,
மாநிலத்தில் என்.ஆர்.சி.வேண்டாம் என்று சொல்வதற்கு ஆயத்தமாவதாக எதிர்
பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மும்பை சேனா பவனில் கட்சித்
தலைவர்களிடம் பேசிய தாக்கரே, தனது கண் காணிப்பில் மாநிலத்தில் எந்த
தடுப்புக்காவல் மய்யங்களையும் வர அனுமதிக்க மாட்டேன் என்று
தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment