Tuesday, December 31, 2019

உலகின் பிரபலமான இளம்பெண் மலாலாவுக்கு அய்.நா. கவுரவம்


கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து அய்.நா கவுரவித்து உள்ளது.
பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012ஆம் ஆண்டு தலீ பான் பயங்கரவாதிகள் துப் பாக்கியால் சுட்டனர். எனி னும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பி னார்.
அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இன்றி பன்னாட்டு அளவில் பெண் களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கி னார். 2014ஆம் ஆண்டு அவ ருக்கும், இந்தியாவின் கைலா‌‌ஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அய்.நா.வின் அமை திக்கான தூதரானார்.
மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம் பெண்ணாக அவரை உரு வாக்கி உள்ளதாக அய்.நா. தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம் (2010), சிரிய உள்நாட்டு போர் துவக் கம் (2011), பெண்களின் கல் விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), பருவநிலை மாற்றம் தொடர் பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பு (2015) ஆகியவற்றை அய்.நா. குறிப்பிட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...