Tuesday, December 10, 2019

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா விலகல்

கருநாடக சட்ட சபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக் குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. இதில் பா.ஜ.க. 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத் துள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆறுதல் வெற்றி அடைந் துள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட 12 தொகுதி களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கருநாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுக்கு பொறுப் பேற்று எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார்.
இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது, ‘‘ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மக்கள் முடிவை ஏற்கிறேன். கருநாடக சட்டப் பேரவை இடைத்தேர்தல் முடிவுக்கு பொறுப் பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்ப வுள்ளேன்’’ எனக் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...