Tuesday, December 10, 2019

சென்னை-திருப்பதி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ரூ.1 கோடியில் மரக்கன்றுகள் நெடுஞ்சாலை ஆணையம் உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர். கோகுல்ராஜ், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2015ஆ-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2010-ஆம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது.
அப் போது, சாலையின் இருபுறமும் இருந்த 1,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட் டப்பட்டன. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக் கன்றுகள் நட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதை முறை யாக கடைபிடிக்கவில்லை.
எனவே, சென்னை_திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரி வாக்கத்துக்காக வெட்டப் பட்ட மரங்களுக்கு பதிலாக தலா 10 மரக்கன்றுகள் நடுவ தற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே. கோயல், நீதிபதி ராமகிருஷ் ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன் னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் துக்காக வெட்டப்பட்ட மரங் களுக்கு பதிலாக தலா 10 மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.1 கோடி வனத்துறைக்கு வழங் கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டி ருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், ‘இந்த மனு மீதான விசாரணை முடித்து வைக்கப் படுகிறது.
மரக்கன்றுகள் நடுவதில் குறைபாடு இருந் தாலோ, மரக்கன்றுகளை நடாமல் விட் டாலோ மனுதாரர் மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தை அணு கலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...