Tuesday, December 10, 2019

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகுதான் புகார் தரவேண்டுமாம்!

உ.பி. சாமியார் ஆட்சியில் காவல்துறையின் கீழிறக்கம்!
 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் வந்து புகார் அளிக்கும்படி காவல்துறையினர் கூறியதாகப் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு தேசிய அளவில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் ஒரு பெண் புகார்
உத்தரப்பிரதேச மாநிலம் உன் னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பிணையில் வெளியே வந்து தீ வைத்து எரித்தனர். அப்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனை யில் உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்குள் உன்னாவ் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பெண் புகார் தெரிவித் துள்ளார்.
ஊடகம்மூலம் வெளிச்சத்திற்கு வந்தது....
மூன்று மாதங்களுக்கு முன்பு உன் னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன் கொடுமை செய்ய முயற்சி செய்துள் ளது. அந்த கும்பலிடமிருந்து தப்பிய பெண், காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முயன்றுள்ளார். ஆனால், புகாரை ஏற்க மறுத்த காவல் துறையினர், பாலியல் வன்முறை செய் யப்பட்ட பின்பு வந்து புகார் கொடு, இப்போ கிளம்பு என தெரிவித் துள்ளதாக கூறப்படுகிறது. காவலர் களின் இந்தப் பதிலை கேட்ட பாதிப் புக்குள்ளான பெண், தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஊடகம்மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள் ளார்.
மூன்று மாதங்களாக...
அப்போது மூன்று பேர் சேர்ந்து தன் ஆடைகளை பிடித்து இழுத்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும், பின்பு, தான் அந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டதாகவும் கூறியுள்ள அவர், உடனடியாக புகார் அளிக்கச் சென்றும் அதனை ஏற்க காவல் துறையினர் மறுத்ததாகவும், இந்த சம்பவம் நடந்த பின்னர், மூன்று மாதங்களாக காவல் நிலையத்திற்கு நடையாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல் நிலையத்திற்கு சென்றும், எந்த பயனும் இல்லாததால் தான் அவற்றை சமூகவலைதளம் மூலம் தாம் தெரிவித்துள்ளதாக கூறி யுள்ள அப்பெண், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என அந்த மூன்று  பேரும் மிரட்டுவதாக வும் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...