Thursday, December 19, 2019

பெண்களின் நிலை: 112 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

பெண்களின் நிலை குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், இந்தியா, 112 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பன்னாட்டளவில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் வளர்ச்சி குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு, 2006 முதல் ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகெங்கும் உள்ள, 153 நாடுகளில், பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான அறிக்கையில், ஆண் - பெண் விகிதாசாரத்தில், இந்தியா, 112 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு, 108 ஆவது இடத்தில் இருந்தது. சீனா, 106 ஆவது இடம்; இலங்கை, 102 ஆவது இடம்; பாக்., 151 ஆவது இடத்தில் உள்ளது. இதில், அய்ஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
பன்னாட்டளவில், ஆண் - பெண் விகிதா சாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு, மேலும், 108 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு ஆய்வில் தெரியவந்தது. அது தற்போது, 99.5 ஆண்டாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம், வேலை, அரசியலில் இந்த இடைவெளி மிக அதிகமாக உள்ளது.
அரசியலில் ஆணுக்கு இணையாக பெண் களுக்கு சமவாய்ப்பு அளிப்பதற்கு, மேலும் 107 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு ஆய்வில் கணக்கிடப்பட்டது. அது தற்போது, 95 ஆண்டுகளாக குறைந்துள்ளது. உலகெங்கும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு, 25.2 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டு, 24.1 சதவீதமாக இருந்தது.
அதேபோல் அமைச்சர்கள் பதவியில் பெண்களின் பங்கு, 19 சதவீதத்தில் இருந்து, 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆணுக்கு இணை யாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பு கிடைப்பதற்கு, 202 ஆண்டுகளாகும் என, கடந் தாண்டு கணிக்கப்பட்டது. தற்போது, அது, 257 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. பல்வேறு முக்கிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
இந்தியாவைப் பொருத்தவரை, அரசியல் அதிகாரம் அளிப்பதில், உலகளவில், 18 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், சுகாதாரத்தில், 150 ஆவது இடம், பொருளாதார வாய்ப்புகளில், 149 ஆவது இடம், கல்வியில், 112 ஆவது இடத்தில் உள்ளது. அதனால், ஒட்டுமொத்த பட்டியலில், இந்தியா, 112 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...