Thursday, December 19, 2019

கலவரக்காரர்களை ஆடையை வைத்தே கண்டறியலாமா?

‘‘மோடிஜி என் உடையை வைத்து

நான் யாரென்று சொல்லுங்கள்'': மம்தா

கொல்கத்தா, டிச.19  தவறு செய் பவர்களை அவர்கள் அணியும் உடைகளை வைத்து வேறுபடுத்தி பார்க்க முடி யாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட் டத்துக்கு எதிராகப் போராட் டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், பேரணி என நாடே கொந்தளித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடி யுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராக நேற்று முன் தினம் பேரணியை தொடங் கினார். அப்போது அவர் பேசுகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும் பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். அந்த வகையில் நேற்றும் அவர் பேரணியை தொடர்ந்தார்.
அப்போது அவர் பேசுகை யில், தலையில் அணிந்திருக் கும் தொப்பியை வைத்து பாஜகவினர் மக்களை வேறு படுத்தி பார்க்கின்றனர். ஆனால், போராட்டம் நடத் துபவர்களை மட்டும் அவர் கள் அணிந்திருக்கும் உடையை கொண்டே அடை யாளம் கண்டு கொள்கின்ற னர்.
அசாம், திரிபுராவைப் பாருங்கள்...
இந்த நாடு மோசமான கட்டத்தை நோக்கி செல் கிறது. நான் அணிந்திருக்கும் உடையை வைத்து நான் யார் என்பதை  மோடியால் சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது இந்த நாட்டில்? பாஜகவினர் தங்கள் சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்கள் பிரிவினை மற்றும் அருவெறுக் கத்தக்க அரசியலில் ஈடுபடு கின்றனர். அசாமில் நடந்து கொண்டிருப்பதைப் பாருங் கள். திரிபுராவில் நடந்து கொண்டிருப்பதை பாருங் கள்.
வருங்காலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களிலும்கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பும். அவர்களை பொறுத்தமட்டில் நாம் இந் தியர்கள் அல்ல. அவர்களை பொறுத்தமட்டில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வர்கள் இந்தியர்கள் அல்ல. பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பாஜக ஆதர வாளர்கள் மட்டுமே இந்தி யர்கள். மேற்கு வங்கத்தில் 30- க்கும் மேற்பட்டவர்கள் தேசிய குடிமக்கள் பதிவுக்காக தற்கொலை செய்து கொண் டனர். இவர்களின் இறப்பிற்கு யார் பொறுப்பேற்பது? மக்கள் அனைவரும் போராட வேண்டும். ஆனால் சட்டத்தை ஒரு போதும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். ஜார்க்கண்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கலவரக் காரர்களை ஆடையை வைத்தே கண்டறியலாம் என தெரிவித்திருந்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...