Thursday, December 19, 2019

மாநிலவாரியாக மதங்களை வகைப்படுத்த முடியாது!: உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!

மாநில வாரியாக மதங்களை வகைப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, இந்துக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினர் என்று அறிவிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய கணக்கீட்டின்படி அல்லாமல் மாநில வாரியான மக்கள் தொகை அடிப்படையில் மைனாரிட்டி சமூகத்தினரை வகைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சில மாநிலங்களில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் மட்டும் இந்துக்களை சிறுபான்மையினர் என்று அறிவிக்க முடியாது. சிறுபான்மையினர் சமூகத்தை தேசிய அளவில் கணக்கிட வேண்டுமே தவிர மாநில அளவில் வகைப்படுத்த முடியாது. மொழிகளை மட்டுமே மாநில வாரியாக வகைப்படுத்த வேண்டும், மதங்களை அவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று கூறினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...