Tuesday, August 6, 2019

இந்தியர்களின் வீட்டுக்கடன் சுமை அதிகரிப்பு

சொந்த வீடு வாங்க, இந்­தி­யர்­கள் வாங்­கும் கடன் மற்­றும் வீட்­டுக்­கட­னுக்­காக செலுத்­தும் தொகை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரி­விக்­கிறது.
மும்பை உள்­ளிட்ட நக­ரங்­களில், வீடு வாங்­கும் தன்மை மேலும் கடி­ன­மா­கி­யுள்­ளது.இந்­தி­யா­வில் வீட்­டிற்­கான சரா­சரி விலை, சரா­சரி இந்­தி­ய­ரின் மாத வரு­மா­னத்­தில், 61.5 மடங்­காக இருப்­ப­தாக, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள, குடி­யி­ருப்பு வீடு விலை தொடர்­பான அறிக்கை தெரி­விக்­கிறது.
மும்பை நக­ரத்­தில் வீட்­டிற்­கான சரா­சரி விலை, சரா­சரி மாத வரு­மா­னத்தை விட, 74.4 மடங்­காக இருக்­கிறது. சென்னை நக­ரில் இது, 58.6 மடங்­காக இருக்­கிறது. பல நக­ரங்­களில் வீடு வாங்­கு­வது கடி­ன­மா­ன­தாக மாறி­யி­ருக்­கிறது.வீட்­டுக்­க­ட­னுக்­காக இந்­தி­யர்­கள் செலுத்­தும் மாதத்­த­வ­ணை­யும் அதி­க­ரித்­துள்­ளது. எனி­னும், இது, கடன் வலை­யாக மாறும் நிலை இல்லை.
வீட்டு மதிப்­புக்­கும் கட­னுக்­கு­மான விகி­த­மும் அதி­க­ரித்­துள்­ளது.மேலும் இந்­தி­யர்­க­ளின் வீட்­டுக்­க­டன் சுமை கடந்த, 4 ஆண்­டு­களில், 13 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. வீடு வாங்­கு­ப­வர்­கள் சரா­ச­ரி­யாக தங்­கள் ஆண்டு வரு­மா­னத்தை விட, 3.4 மடங்கு கடன் பெற வேண்­டி­யுள்­ளது. சண்­டி­கர், அய்த­ரா­பாத் மற்­றும் அக­ம­தா­பாத் நக­ரில் இது, மிக­வும் அதி­க­மாக உள்­ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...