Tuesday, August 6, 2019

கீழடி அகழாய்வில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5ஆ-ம் கட்ட அகழாய்வில் நேற்று எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிக்கப் பட்டது.
இதன்மூலம் 2,500 ஆண்டு களுக்கு முன்பே தமிழர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கி யுள்ளனர் என்பது தெரியவந் துள்ளது.
கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயி ரக்கணக்கான தொல்பொருட் கள் கண்டறியப்பட்டன. இதை ஆய்வு செய்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதை யடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அக ழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5ஆ-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகல மான சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. நேற்று முருகேசன் என்ப வருக்கு சொந்தமான நிலத் தில் உயரமான உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 உறைகள் உள்ளன. மேலும் கீழே தோண்டும் போது இன்னும் உறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதேபோல் கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரி யம்மாள் ஆகியோரது நிலத் தில் மணிகள் உள்ளிட்ட அணி கலன்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இன்று விலங்கு எலும்பில் செய்யப் பட்ட எழுத்தாணி கண்டு பிடிக்கப்பட்டது.  எலும்பை நன்கு தீயில் வாட்டி, பக்கு வப்படுத்தி எழுத்தாணியைத் தயாரித்துள்ளனர். இதை பயன் படுத்தி கல் போன்றவற்றில் எழுதியுள்ளனர்.
இதன்மூலம் 2,500 ஆண்டு களுக்கு முன்பே தமிழர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கி யுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...