தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் உற்பத்தி
நிலையத்தில் (Kudankulam Nuclear Power Plant) திட்டமிடப் பட்டுள்ள 3-ஆவது
அலகின் முக்கிய இயந்திரத் தளவாடங்கள் அண்மையில் கூடங்குளம் வந்தடைந்தன.
இதற்கான தொழில்நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்களை வழங்கும் பணியை ரஷ்ய
நாட்டின் ஏ.எஸ்.இ. (ASE) நிறுவனம் ஏற்றுள்ளது. இதையொட்டி, ஏ.எஸ்.இ.
வடிவமைத்து, தயாரித்து வழங்க வேண்டிய முக்கிய இயந்திரங்களின் பட்டியல்படி
மூன்றாவது அலகுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
ரஷ்ய நாட்டு அரசின் அணுமின் உற்பத்திக்
கழகமான ரொசாட்டம் (ROSATOM) நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் ஏ.எஸ்.இ.
ஆகும். ரொசாட்டம் சார்பிலான ஒப்பந்தங்களுக்கு தேவையான அனைத்து
தொழில்நுட்பப் பணிகளையும் இதுதான் பொறுப்பு ஏற்று முடித்துத் தருகிறது.
இந்த ஏ.எஸ்.இ. நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நடைபெறும் அனைத்துப்
பணிகளுக்குமான துணைத் தலைவர் ஆன்ட்ரி லெப்தேவ் தற்போதைய நடப்புகள் குறித்து
பேசுகையில், இந்த 3-ஆவது அலகின் அணுஉலை அமைய உள்ள இடத்தில் நிறுவப்பட
வேண்டிய முக்கிய இயந்திர தளவாடங்கள் தற்போது சப்ளை செய்யப்பட்டு விட்டன''
எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment