கேரளாவில் முதன் முதலாக அரசுத் துறைகளில் பெண் களையும் ஓட்டுநர் பணியில் நியமிக்க அரசு தீர்மானித் துள்ளது.
கேரளாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பினராய்
விஜ யன் முதல்வராக பொறுப் பேற்றபோது பெண்களுக்கு சம உரிமை வழங்கும்
திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அரசுத் துறைகளில்
பெரும்பாலான பொறுப்புகளில் பெண்கள் பதவி வகித்து வருகின்ற போதிலும் இதுவரை
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஓட்டுநர் பணியில் பெண்கள்
நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை
நிறுவனங்களிலும் ஓட்டுநர் பணிக்கு பெண்களை நிய மிக்க தீர்மானிக்கப்பட்டுள்
ளது.
பினராய் விஜயன் தலைமையில் நேற்று
திருவனந்த புரத்தில் நடந்த அமைச்சர வைக் கூட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டது. இதற்காக பணி நியமன சட்டங்களில் மாற்றம் செய்யவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment