Thursday, August 22, 2019

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 255 நூற்பாலைகள் மூடல் 1.20 லட்சம் பேர் வேலையிழப்பு

நூல் இறக் குமதியை சீனா குறைத்துள்ள தால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 255 நூற்பாலைகள் மூடப்பட்டுள் ளன. இதனால் 1.20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2 ஆயிரம் நூற்பாலைகள் உள்ளன.  கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 600 நூற்பாலைகள் உள்ளன.இதனால், 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வந்துள் ளனர்.
இந்நிலையில், இந்தியா வில் இருந்து நூல்களை இறக்குமதி செய்வதை சீனா படிப்படியாக குறைத்துக் கொண்டது. இதற்கு பதிலாக பாகிஸ்தான், வியட்நாம், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக் குமதி செய்து வருகிறது. இதனால் நூற்பாலைகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நூற்பாலைகளை நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் உள்ளனர்.
கடந்த 2017 முதல் நடப்பு ஆண்டுவரை தமிழகத்தில் 225 மில்கள் மூடப்பட்டுள் ளது. கோவை மற்றும் திருப்பூரில் 35க்கு மேற்பட்ட நூற்பாலைகள் மூடப் பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கோவை, திருப்பூரில் மட்டும் 10 ஆயிரத் திற்கு மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.
இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், ‘‘நூல் ஏற்றுமதிக்கு சீனாவை நம்பியிருந்த நிலையில் அது வும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பருத்தி விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்த நெருக்கடி நிலையை போக்க மத்திய அரசு பூஜ்ஜிய சதவீத இறக்குமதியை கொண்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். நூற்பாலை களுக்கான மூலப்பொருட் களை பூஜ்ஜிய சதவீத அடிப் படையில் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் ஒப்பந்தம் மேற் கொள்ள வேண்டும்’’ என்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...