Monday, August 19, 2019

காஷ்மீரில் இந்துத்துவ அமைப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் அரசின் முடிவிற்கு ஆதரவாக ஊர்வலம்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு தகுதி நீக்கப்பட்டது; இதனை அடுத்து அங்கு மிகவும் பதட்டமான சூழல்நிலவி வருகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீக்கப்பட்ட சட்டப்பிரிவு அதனை அடுத்து ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு மற்றும் 7 காஷ்மீரிகளுக்கு ஒரு ராணுவ வீரர் என்ற நிலையில் அங்கு அச்சமூட்டும் சூழல் நிலவி வருகிறது, இந்த நிலையில் அங்கு இந்துத்துவ அமைப்பினருக்கு மட்டும் பேரணி நடத்த அனுமதி தரப்பட்டது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள காஷ்மீரில் பல விதங்களில் கடுமை யாக கட்டுப்பாடுகள் இன்றளவும் தொடர்கிறது.
இந்த நிலையில் திடீரென விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் இந்து ஜக்ருதி சேனா போன்ற அமைப்புகள் ஞாயிறு அன்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தின. அதில் பலர் கையில் திரி சூலம், வாள் போன்றவற்றை ஏந்திக் கொண்டு மத்திய மோடி அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மையின ருக்கு எதிராகவும் கூச்சலிட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் ஊர்வலத்தை ஒட்டி அப்பகுதியில் இணையதள சேவை கள் முடக்கப்பட்டது. இவர்களின் ஊர்வலத்திற்கு எந்த பாதிப்பும்  ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கார ணத்திற்காக போன் மற்றும் இணைய தள சேவைகள் முடக்கப்பட்டதாக காஷ்மீர் ஊடகவியலாளர்கள் கூறி னர்.  இதுவரை இந்துத்துவ அமைப் பினர்கள் புகுந்திராத சிறீநகர் பகுதி யில் திடீரென்று அதுவும் காஷ்மீருக் கான சிறப்பு உத்தரவு நீக்கப்பட்ட உடன் இந்துத்துவ அமைப்புகள் இணைந்து ஆயுதம் ஏந்தி ஊர்வலம் நடத்துவது இதுவே முதல் தடவை ஆகும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் பிரசவ வேதனையில் இருந்த பெண்ணை 7 கி.மீட்டர் நடந்து செல்ல வைத்த பாதுகாப்புப் படைவீரர்கள் இந்து அமைப்புகளுக்கு ஊர்வலம் நடத்த எந்தத் தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 20 நாள்களாக ஜம்மு காஷ்மீர் உலகத்தில் இருந்து துண் டாடப்பட்டுள்ளது.
400 அரசியல் தலைவர்கள் காவலில்
மேலும் அம்மாநிலத்தில்  400 அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்துத்துவ அமைப்பினர் ராணுவப் பாதுகாப் போடு பேரணி நடத்தி முடித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...