Thursday, August 22, 2019

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவரை மீட்கக்கோரி வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், குளச் சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் அந்தோணி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் 18ஆம் தேதி நீரோடி துறைமுக பகுதியில் இருந்து ஸ்டாலின் என்பவரது படகில் 5 பேர், கேரள ஆழ்கடல் பகுதிக்கு  மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது.  இருவர் மீட்கப் பட்டனர்.
மேலும் 2 பேர் உடல்கள் கேரள கடல் பகுதியில் மீட்கப்பட்டன. மீனவர் ஜான்பாஸ்கோ (44) மட் டும் இதுவரை மீட்கப்படவில்லை. அவரை மீட்கவும், கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட வேண் டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசா ரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...