Friday, April 27, 2018

உ.பி. அரசுக் கோப்புகள் எரிந்ததன் பின்னணி

சாமியார் முதல்வர் ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பிடிஆர் மருத்துவமனையில் முக்கிய கோப்புகள் அடங்கிய அறை தீக்கிரை யாகியது. இதில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர் பான பல கோப்புகள் இருந்தன. ஆகவே உண் மையை மூடி மறைக்க கோப்புகளை சாமியார் முதல்வரின்கண்காணிப்பில்தீவைத்துக்கொளுத் தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பிடிஆர் மருத்துவமனையின் தலைவர் அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயானது பக்கத்து அறைகளுக்கும் பரவியது. கரும்புகையுடன் தீவிபத்து ஏற்பட்டாலும், அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறையினரால் அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் மருத்துவமனையில் இருந்த அதிமுக்கிய கோப்புகள் அனைத்தும் சாம் பலாயின. மேலும் கடந்த ஆண்டில் தொடர்ந்து நடந்த குழந்தைகள் மரணம் தொடர்பான கோப்புகள், விசாரணை அறிக்கை அடங்கிய கோப்புகள், வரவு- செலவு, ஆக்சிஜன் பற்றாக் குறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. மேலும் விபத்து நடந்த அறையில் இருந்த தீயணைப்பான் சிலிண்டர்கள் வேலை செய்ய வில்லை என்பதால் அரசின் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனையில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் குறை பாட்டினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. அது குறித்த விசாரணை நடந்து வரும் சமயத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை அறிக்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ளார் என்பதும், அவர் தொழிற் சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு உருளை வழங்கும் உரிமம் வைத்துள்ளார் என்பதும், மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் எரிவாயு உருளை வழங்கும் உரிமம் அவரிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல உண்மைகள் அந்த விசாரணை அறிக்கையில் இருப்பதால் அந்த கோப்புகளை எரித்து இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆக்சிஜன் வாயுக்குப் பதிலாக நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டதுதான் குழந்தைகளின் பரிதாப மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
பி.ஜே.பி. அரசு என்றால், மனிதாபிமானம் எள் மூக்கு முனை அளவுக்கும் அதனிடமிருந்து எதிர்பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மருத்துவத் துறையே கொலைகாரத் துறையாகிவிட்டால், மக்கள் யாரை நம்புவது?
எல்லாம் கடவுள் செயல், கர்மப் பலன் என்று கூறித் தப்பிக்கக் கூடிய ‘ஆன்மிகம்‘ அவர்கள் கைவசம் இருக்கவே இருக்கிறது. அதுவும் ஒரு சாமியாரே ஆட்சியின் முதல்வராக ஆனபின்பு, இப்படி சொல்லுவதும்கூட எளிதுதானே!
இந்தியா முழுவதும் உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணித்தது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இப்பொழுது என்னவென்றால் விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டனவாம். பி.ஜே.பி. ஆட்சியில் ஒவ்வொரு நொடியும் குடிமக்களுக்கு அச்சுறுத்தலும், அபாய மும் நிறைந்ததாக ஆகிவிட்டதே! இதுதானே ராமராஜ்ஜியம் - ஹிந்துராஜ்ஜியம் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...