இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் பொறியியல் அறிவியல் ஆய்வு கல்வி நிறுவனங்களாக இயங்கி வருகின்றன.
அறிவியலுக்கு சற்றும் தொடர்பில்லாத கற் பனைகள், கட்டுக்கதைகள், ஆபாசங்களைக் கொண்ட புராணங்கள் மற்றும் வேதங்கள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே கற்பிக் கப்பட உள்ளன எனும் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி யுள்ளது.
இந்திய தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனமாகிய கான்பூர் அய்.அய்.டி.யில் கீதை, இராமாயண பாடங்கள் மற்றும் இந்துமத வேதங்கள் தொடர்பான ஆடியோ கற்பிக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக கீதை குறித்த www.gitasupersite.iitk.ac.in இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சிறீமத் பகவத் கீதை, ராமச்சந்திர மானாஸ், பிரம்ம சூத்திரம், யோக சூத்திரம், சிறீ ராம் மங்கள் தாஸ்ஜி மற்றும் நாரதா பக்தி சூத்திரம் உள்ளிட்ட ஒன்பது மத சார்பான பாடங்கள் அவ்வ¤ணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
அய்.அய்.டி.நிறுவனங்கள் தன்னாட்சியுடன் செயல்பட்டு வருபவையாக இருந்த போதிலும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை நிதி ஒதுக்கீட்டில் இயங்கி வருகின்ற நிலையில், அமைச்சகத்தின் அதிகாரத்துடன் அவ்வப்போது முரண்பாடான பரிந் துரைகளை உத்தரவாக அளித்து வருகின்றன.
வாஜ்பேயி தலைமையிலான பாஜக ஆட்சியின் போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சகம் 2001ஆம் ஆண்டில் ரூபாய் 25 லட்சம் நிதியை இத்திட்டத்துக்காக ஒதுக்கியது.
இந்திய மொழி தொழில்நுட்பத் தீர்வுகளுக்கான வள மய்யத்தின் பேராசிரியர் டி.வி.பிரபாகர் கூறிய தாவது:
“அய்.அய்.டி. நிறுவனத்துக்குள்ளும், வெளியிலும் இந்த புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிகோலும் வகையில், கல்வியாளர்களைக் கொண்டு நீண்ட காலமாக இந்த திட்டத்துக்காக செயல்பட்டு வந்துள் ளோம். பன்னாட்டளவிலும், இந்தியாவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது முதல் முறையாகும். நல்லவை செயல்படுத்தப்படும்போதெல்லாம் விமர்சனங்கள் வரும். இதுபோன்ற உன்னதமான பக்திக்கான முன் முயற்சிகளால் மதசார்பின்மை என்னாவது என்று கேள்வி எழுப்ப முடியாது’’ என்றார். அய்.அய்.டி. கான்பூர் இயக்குநர் மகேந்திர அகர்வால் பேராசிரியர் பிரபாகரின் கருத்தையே இவ்வாறு கூறினார்.
.இணைய தளத்தில் 'வேதாந்த அறிவே அதிகாரிக்கு (பணியாளர், அலுவலர், ஊழியர்) தகுதியானது’ என்பதை நோக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தத்துவப்பாடத் தில் சிறப்பிடம், முனைவர் பட்டம் பெறுவோர், சுவாமி பிரம்மானந்தாவின் சமஸ்கிருத மந்திரங்களை ஆங்கிலத்தில் ஆடியோவாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், கவுகாத்தி அய்.அய்.டி. பேராசிரியர் தேவ் ஆனந்த் பதக் ஆவாதியில் ராமச்சந்திரமானாஸ் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இதுபோன்ற 'புனித' பாடங்களுக்காக மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என்று அய்அய்டி நிறுவனம் கோரி வருகிறது.
இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று வரலாற்று அறிஞர்கள் எழுதி யுள்ளனர்.
இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள, அசுரர்கள், அரக்கர்கள், என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் தென்னாட்டவரான திராவிடர்களைத்தான் என்று வரலாற்று அறிஞர்கள் (பார்ப்பனர்கள் உட்பட) எழுதியுள்ள நிலையில், இராமாயணத்தைப் பாடத் திட்டத்தில் அதுவும் அய்.அய்.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெறச் செய்வதன் மூலம் - இனப் போராட்டத்தை - பகையை இந்த 2018ஆம் ஆண்டிலும் உசுப்பி விடும் பாசிச வேலையில் மத்திய பிஜேபி அரசு இறங்கி இருப்பதாகத் தெரிகிறது.
பெண்களும், சூத்திரர்களும் வைஸ்யர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதை அய்.அய்.டி.யில் பாடம் என்றால், இது எவ்வளவுப் பெரிய பித்தலாட்டம் - போக்கிரித்தனம்?
மதப் போராட்டங்களையும் தாண்டி இனப் போராட் டங்களையும் தூண்டுவது நாட்டுக்கு நல்லதல்ல.
No comments:
Post a Comment