ஆதாயமுள்ள பதவியில் உள்ளனர் என்று கூறி, டில்லி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உடன டியாக அவர்களை பதவிநீக்கம் செய்துள்ளார் குடியரசுத் தலைவர்.
நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்ற பிறகு நடந்த முதல்தேர்தலில்அவமானகரமானதோல்வியைடில்லி சட்டமன்றம்தந்தது.மோடிக்குஎதிராகநின்றுவென்று காட்டியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் துவக்கிய ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை கொண்ட மத்தியில் ஆளும் ஒரு கட்சியை அவமானகரமான தோல்வியடையச்செய்துவிட்டது, இதனால், தொடர்ந்து டில்லி ஆம் ஆத்மி கட்சி தலைமையினாலான அரசுக்குப் பிரதமர் மோடி டில்லி ஆளுநர் மூலம் கடும் நெருக்கடி தந்தார்.
இந்த நேரத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு இணங்க தங்கள் கட்சி வளர்ச்சிப் பணிக்கு சில பதவிகளை உருவாக்கி அதில் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார்.
அவ்வளவுதான், ஆதாயம் பெறும் பதவியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கலாமா என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடம் முறையிட இறுதியில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்ன ஆதாயம் தரும் பதவி? அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அலுவலம், ஓர் உதவியாளர். இது தான் அந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்த ஆதாயமாம்; இதை வைத்து அவர்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டன. அப்படி என்றால் நிர்மலா சீத்தாராமன் உட்பட மத்திய அமைச்சர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி என்றோ பறிக்கப்பட்டிருக்கவேண்டுமே!
பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோபால். இவரது மகன் சவுரியா தோபால். இவர் நிதி நிறுவனம் மற்றும் பாஜக தலைவர்கள் மோடி உள் ளிட்ட பலர் அயல்நாடுகள் செல்லும் போது அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் நடத்தும் நிறுவனங்கள் அனைத்தும் ‘‘இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை’’ என்ற பெயரின் கீழ் இயங்குகின்றன. இந்த நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இயக்குநராக உள்ளார்.
அஜித் தோபாலின் மகன் சவுரியா தோபால் நடத்தும் இந்த நிறுவனத்தில் நிர்மலா சீத்தாராமன் மட்டுமல்லாமல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஆகியோரும் இந்நிறுவனத் தின் இயக்குநர்கள். பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம்மாதவ்வும் இயக்குநராக உள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ‘‘இந்தியா ஃபவுண் டேஷன் அறக்கட்டளை’’த் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளதோடு, கோடிக் கணக்கான பணப் பரிவர்த் தனையும் செய்துள்ள அறக்கட்டளை ஆகும் இது.
பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் மகன் நடத்திவரும் அறக் கட்டளையில் மத்திய அமைச்சர்களே இயக்குநர்களாக இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் கூறுகையில், ‘‘இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நிதிபெறும் உரிமம் வைத்திருக்கிறது. அறக்கட்டளையில் இயக்குநர்களாக உள்ள 4 அமைச்சர்களும் சட்டத்தை மீறியுள்ளனர். சட்டத்தின் பிரிவு 3-இன்படி, பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு நிதிபெறும் அறக்கட்டளைகளில் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது.
இந்த அறக்கட்டளையில் இயக்குநர்களாக உள்ளவர் களில் 4 பேர் அமைச்சர்கள், ராம்மாதவ் பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார். தண்டனைக்குரிய குற்றம் செய்திருக்கின்றனர். இந்திய வரலாற்றில் எந்த அமைச்சராவது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளனரா? மோடி ஏன் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டவர்களின் பதவிகள் பறிக்கப்பட் டிருக்கவேண்டுமே!
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் கண்ணோட்டம் இரண்டு; ஒன்று மதவாதம்; இரண்டு கட்சி வாதம். இந்த இரண்டாவதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும், பல கீனப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி வருகின்றது மத்திய பி.ஜே.பி. ஆட்சி. எல்லாம் ஒற்றைதான்; ஒற்றை இந்தியா; ஒற்றை மதம்; ஒற்றை மொழி; ஒற்றை ஆட்சி; இதற்குப் பெயர்தான் பாசிசம் என்பது!
No comments:
Post a Comment