லிங்காயத்து பிரிவினரை தனி மதமாக அறிவிக்கு மாறு கர்நாடக அரசு ,மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் புதிய மதம் ஒன்று உருவாகும் இந்து மதத்தில் உள்ள லிங்காயத்துகள் தங்களை தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
வீர சைவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, இந்துக் கடவுளான சிவனை வணங்கும் இவர்கள், தங்களை இந்துக்கள் இல்லை என்றும், இந்து வேதங்களை ஏற்பதில்லை என்றும் கூறி வரு கின்றனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கர் நாடக மாநிலத்தில் பசவண்ணர் என்பவரால் தோற்று விக்கப்பட்டது தான் லிங்காயத்துப் பிரிவு.
கழுத்தில் சிவலிங்கத்தை அணிந்து கொண்டு, இந்து மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், ஜாதி அமைப்புகளையும், இந்து மதம் போதிக்கும் மறு ஜென்மம் மற்றும் கர்மவினை போன்ற சில கொள்கைகளையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்த நம்பிக்கை முரண்களால் தங்களை இந்துக்கள் இல்லை என்று கூறிக்கொள்ளும் லிங்காயத்துகள், தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களை இந் துக்கள் என்று அடையாளப்படுத்தக் கூடாது என்று நேரிடையாகவே லிங்காயத்துகள் பரப் புரையே மேற்கொண்டார்கள். மேலும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல் வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர் லிங்காயத்துகள்.
கர்நாடக மாநில மக்கள் தொகையில் 17 விழுக்காடு உள்ளனர் லிங்காயத்துகள். மேலும், கர்நாடக மாநில வாக்கு வங்கியில் 12 விழுக்காடு உள்ள லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கை, அங்கு அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறிவிட்டது. இதனால் அரசியல் கட்சிகள் அவ்வப் போது லிங்காயத்துகள் மீது அக்கறை செலுத்துவது, குறிப்பாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் அந்த அக்கறை அதிகமாவதும் வழக்கமாகிவிட்டது.
லிங்காயத்துக்களுக்கான தனி மத அங்கீகார கோரிக்கை மீது இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக லிங்காயத்து பிரிவைச் சேர்ந்த, பாஜகவின் முக்கிய தலைவராக உள்ள எடியூரப்பா கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த போது கூட, இது தொடர்பான தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அமைச்சரவை லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிக்கும் கோரிக்கைக்கு இசைவு தெரிவித்து, மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான அரசியல் நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. கர்நாடக அமைச்சரவையின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் இன்னுமொரு புதிய மதம் உருவாகும் வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே இராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்தவர்கள் கூட தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூறி சிறுபான்மை யினருக்கு அளிக்கப்படும் சலுகைகள் எங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியதுண்டு. லிங்காயத்துகளைப் பொறுத்தவரை, இந்து மதத்தில் நிலவும் ஜாதியை கர்மா தத்துவத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
ஜாதி இல்லை என்றால் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான் பொருள். ஜாதியை ஏற்காதவர்கள் இந்துக்கள் இல்லை.
எந்த மதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை யென்றாலும் இந்து மதம் என்ற வருணாசிரம அமைப்பின் அடிக்கட்டுமானக் கல்லை யார் பெயர்த்தாலும் அதனை வரவேற்க வேண்டியது தான். மானுட சமூகத்தின் கொடும் எதிரிதான் இந்த இந்து மதம்.
No comments:
Post a Comment