Friday, April 27, 2018

அம்பேத்கருக்கு காவி வண்ணமா?

உத்தரப்பிரதேசம், படான் என்ற ஊரில் உள்ள அம்பேத்கர் சிலை இந்துத்துவா கும்பலால் கடந்த வியாழன் இரவு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டும் என்று பொது மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த திங்களன்று காலை அங்கு மீண்டும் புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
புதிய சிலை அம்பேத்கரின் அடையாளமான நீல நிற கோட் மற்றும் சூட்டுடன் இல்லாமல் வட இந்திய பார்ப்பனப் புரோகி தர்கள் அணியும் குர்தா பைஜாமாவுடன் (ஷெர்வானி) அந்தச்சிலை இருந்தது. அதுமட்டுமல்ல; அவரது சிலை முழுவதும் காவிவண்ணம் பூசப்பட்டு இருந்தது, அவரது கையில் இருந்த அரசியல் சாசன நூலும் காவிவண்ணத்தில் இருந்தது, இதனை அடுத்து அப்பகுதியில் சர்ச்சைகள் வெடித்தன.
அனைத்தையும் காவிமயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அம்பேத்கர் சிலையிலும் அதனை வெளிக்காட்டியுள்ளனர். அண்மைக்காலமாக உத்தரப்பிரதேசத்தில் பூங்காக்கள், கட்டடங்கள் என அனைத்தும் காவி நிறம் பூசப்பட்டன.  இந்த காவி நிறம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ, உத்தரப் பிரதேச அரசோ எந்த ஒரு பதிலும் கூறவில்லை. இந்த நிலையில் அப்பகுதி பகுஜன் சமாஜ்கட்சியினரே முன் வந்து அம்பேத்கரின் சிலைக்கு நீலநிறம் அடித்து காவி வண் ணத்தை மறைத்தனர்.
சமூக புரட்சியாளர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரை இனி பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றே குறிப்பிட வேண்டும் என்று 29.3.2018 அன்று உத்தரப் பிரதேச அரசு ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதன் மூலம் அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளிலும், மாநில கல்வி தொடர்பான அனைத்து நூல்களிலும் இனி ராம்ஜி அம் பேத்கர் என்றே எழுதப்படுமாம்.  எப்போதும் காவி உடையில் இருக்கும் சாமியார் ஆதித்யநாத் மாநிலத்தையே காவி நிறத்தில் மாற்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இன்னும் அங்கு இருக்கும் தண்ணீர், வானம் மட்டுமே காவி வண்ணம் பூசப்படவில்லை. அந்த அளவுக்குக் காவி மீது வெறியுடன் இருக்கிறார் உபி முதல்வர். இன்னும் எந்தெந்த இடங் களுக்கு எல்லாம் காவி நிறத்தைப் பூசச் சொல்வார் என்று அதிகாரிகள் அங்கு குழம்பிப் போய் கிடக்கிறார்கள். சாமியார் முதல்வரின் அலுவலகம் காவி நிறத்தில் காட்சி யளிக்கிறது. அங்கு இருக்கும் எல்லா சுவர்களும் காவிமய மாக்கப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு புள்ளி கூட வேறு நிறத்தில் வைக்கப்படவில்லை. காவல் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பூங் காக்கள் என்று  எல்லாமே காவியில் நிரம்பி இருக்கின்றன. இதற்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இருக்கும் சாலை நடுவில் உள்ள தடுப்புக் கம்பிகளிலும் காவி நிறம் அடித்து இருக்கிறார்கள்.அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கும் பொருட் கள் என அனைத்தையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் இல்லமான லால் பகதூர் சாஸ்திரி பவன் காவி நிறத்துக்கு மாறியது. இதே போல் தலைமை செயலகத்துக்கும் காவி வண்ணம் பூசப்பட்டது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள அவரது இருக்கையிலும் காவி நிறத் துண்டு  இடம்பெற்றது. மாநில அரசுப் பேருந்துகள் அனைத்தும் காவி நிறத்திற்கு மாற் றப்பட்டுவிட்டன.
லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் காவியாகியது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வண்ணம் பூசப்பட்டது. நான் இந்துவாக பிறந்துவிட்டேன், ஆனால் இந்து வாக இறக்கமாட்டேன் என்று சொல்லி தனது இறுதிக் காலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் நாக்பூர் நகரில் பவுத்த மதம் தழுவிய அண்ணல் அம்பேத்கரை காவிகள் இந்துத்துவ வாதியாக காண்பிக்க பல முயற்சி களிலும் இறங்கி வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் ஒன்றில் மேடையில் அம்பேத்கர் படமும் இருந்தது, ஆனால் அந்தப்படம் மற்ற தலைவர்களின் படத்துடன்  சேர்க்காமல் தனித்து வைக்கப்பட்டிருந்தது, அதுமட்டு மல்ல கூட்டம் முடிந்த பிறகு மற்ற படங்களை எடுத்துச் சென்று விட்ட நிலையில், அம்பேத்கர் படத்தை மட்டும் மேடையிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். இதைக் கண்ட அப் பகுதி மக்கள் அந்தப்படத்தை எடுத்துச்சென்று தங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் மாட்டினர்.
அம்பேத்கர் சிலைகளை உடைப்பது இந்துத்துவ அமைப்பினர் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு பக்கத்தில் அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண் டாடுவது, அவர் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிப்பது - இன்னொரு பக்கத்தில் அண்ணல் அம்பேத் கருக்கு இந்துத்துவா வடிவம் கொடுப்பது எல்லாம் பச்சை அயோக்கியத்தனமும், பார்ப்பனீயத்துக்கே உரித் தான திரிபு வேலையுமாகும்.


சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். வெகுமக்கள் எழுச்சிப் புயல் வெடித்துக் கிளம்ப வேண்டும்; அதிகார பீடத்தி லிருந்து காவிகளை அகற்றிட சூளுரைப்போம்,  அதனை வெற்றியாக்கிக் காட்டுவோம்! இதுவே முழுமுதற் பணி யாக இருக்க முடியும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...