மதுரையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி தான் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த திட்டங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. போகிற போக்கில் சொல்லி விட்டுப் போவதைப் போல அறிவிப்புகள் இருக்கின்றன.
உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, கறுப்புப்a பணம் மீட்கப்படும், பயங்கர வாதச் செயல்களுக்கு பணம் செல்வது தடுக்கப்படும் என் றனர். ஆனால், அவர்கள் கூறிய இரண்டுமே நிறைவேற வில்லை. பாஜக அரசின் திட் டங்கள் அனைத்துமே பெரு நிறுவனங்கள் சார்ந்ததாக இருக்கின்றன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது . முதல் நாளிலேயே பொருள் களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி என்பது மக்கள் மீதான சுமை யாகவே இருக்கும்.
இடஒதுக்கீடு முறையை மறைமுகமாக ஒழிக்க வேண் டும் என்பதற்காகவே நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத் தில் அறிவிக்கப்படாத குடிய ரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்க மத்திய அரசு முயன்று வரு கிறது. வகுப்புவாதத்தை தமிழ கத்திலும் கொண்டுவர முயற் சிக்கிறது. இதேநிலை தொடர்ந் தால் அதனால் ஏற் படக்கூடிய பின்விளைவு களுக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு, தமிழக அரசின் செயலற்ற நிலையை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தின் 6 நகரங்களில் இருந்து விழிப்புணர்வு பய ணம் தொடங்கியிருக்கிறது. ஜூலை 5 ஆம் தேதி திருச்சியில் இப் பயணம் நிறைவு பெறு கிறது. மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக எந்தவித போராட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக் கப்படும் என்றார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சிபிசிஎல் நிறுவனம் மிகப்பெரிய குழாய் பதிப்பு கருத்து கேட்காமல் திட்ட விளக்க கூட்டம் நடத்தியமைக்கு எதிர்ப்பு
- லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
- சட்டமன்ற செய்திகள்
- முதுகலை மருத்துவ தகுதிப் பட்டியல் வழக்கு: ஜூன் 28 இல் விசாரணை
- சட்டமன்ற செய்திகள் கீழடி தொல்பொருள்கள் தமிழகத்திலேயே ஆய்வு
No comments:
Post a Comment