ஜி.எஸ்.டி.க்கு நாடு முழுவதும் எதிர்ப்பு:
மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி
நள்ளிரவுக் கொண்டாட்டம் தேவையா? - கேரள முதல்வர்
குஜராத்தில் இறுதிச் சடங்குகள்!
அகமதாபாத் ஜூலை 2 ஜி.எஸ்.டி. எனப்படும் நாடு முழுவதும் ஒரே வரிக்கொள்கையினைக் கண்டித்து இந்தியாவின் அனைத்து தொழில் நகரங்களிலும் வணிகர்கள் போராடி வருகின்றனர். பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வணிகர்கள் மோடி மற்றும் அருண்ஜெட்லிக்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டம் நடத்தினர்.
ஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிக் கொள்கை நாடு முழுவதும் ஜூலை முதல் நாள் அதிகாலை 12 மணிக்கு நிறைவேறியது, இதற்காக சுதந்திரத் திற்கு பிறகு மீண்டும் நள்ளிரவில் நாடாளுமன்ற மய்ய அவை கூடியது, இந்த வரிக்கொள்கை நடை முறைப் படுத்தும் நிகழ்ச்சியில் மோடி, பிரணாப்முகர்ஜி உள்பட மத்திய அரசின் அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பாக துவங்கிய இந்த ஜி.எஸ்.டி.யை, ஆளும் கட்சியினர் விழா வாக கொண்டாடிய அதேவேளையில் வணிகர்கள் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தில் போராட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி.யை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். மோடியின் மாநிலமான குஜராத்தில் பல விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. சூரத் நகரில் ஆயத்த ஆடை, தங்க வைர நகை உற்பத்தி, பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைப் பெட்டி பிளாஸ் டிக்குகள் போன்றவற்றை தயாரித்து மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் அதிகம் உள்ளனர். குஜராத் மாநிலத்தின் மொத்த வருவாயில் சூரத் நகரம் 22 விழுக்காடு தருகிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரியினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், இதனால் எங் களின் வணிகம் பாதிக்கப்படும் என்று கூறி மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்த்தை மத்திய அரசு செவிகொடுத்துக் கேட்க வில்லை.
மோடி - ஜெட்லி படங்கள் எரிப்பு
இந்த நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஜி.எஸ்.டி. அறி முகமானது. தங்களின் தொடர் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மோடி, அருண் ஜெட் லியைக் கண்டித்து நள்ளிரவில் சூரத் வணிகர்கள் மோடி மற்றும் அருண் ஜெட்லி இருவரின் உருவப் பொம்மை களுக்கும் இறுதிச்சடங்கு செய்து போராட்டம் நடத்தினர். முன்னதாக சூரத் நகரின் கபடா பஜார் என்ற பகுதியில் துவங்கி மோடி அருண் ஜெட்லி முகமூடியை ஒரு உருவப் பொம்மையின் மீது பொருத்தி அதை இறுதி ஊர்வலமாக சுமந்துகொண்டு சென்றனர். காணொலியில் போராட்ட ஊர்வலத்தில் பலர் ஆடிப்பாடிக் கொண்டு, "இதோ இந்தியாவின் இறுதி அத்தியாயம் எழுதியவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது" என்று கூறிக்கொண்டு சென்றனர். இறுதியில் சரியாக 12 மணி அளவில் அதற்கு இறுதிச்சடங்கு செய்தனர். இந்திய வரலாற்றில் ஒரு நாட்டின் பிரதமரை அவரது சொந்த மாநில மக்களே இறுதிச்சடங்கு செய்யும் போராட்டத்தை முதல்முறையாக நடத்தியுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
அரியானா - ராஜஸ்தானில் போராட்டம்
இவ்விவகாரம் தொடர்பாக சூரத் நகர காவல்துறையினரிடம் கேட்ட போது "இப்போராட்டம் எந்தப் பகுதியில் நடைபெற்றது என்ற உறுதி யானத் தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்துவருகிறோம்" என்று கூறினர். அதே போல் கொல்கத்தா நகரில் ஜி.எஸ்.டி. உருவப் பொம்மையை வணிகர்கள் ஊர்வலமாக கொண்டுவந்து சாலையில் தீயிட்டு எரித்தனர். பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநி லங்களிலும் கடுமையான போராட் டங்கள் வணிகர்களால் மேற்கொள்ளப் பட்டன.
இப்போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, "ஜி.எஸ்.டி. பற்றிய புரிதல் இல்லாத கார ணத்தால் இப்போராட்டங்களை சிலர் மேற்கொள்கின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் இவ்வரியினால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும்; அதே நேரத்தில் விரைவில் மக்கள் இந்த வரிக்கு தங்களை மாற்றிக்கொள்வார்கள் இதனால் நாட்டின் வருவாய் பெருகும்" என்று தெரிவித்தார்.
மக்களாட்சி கொலை
செய்யப்பட்டு விட்டது - மம்தா பாய்ச்சல்
ஜி.எஸ்.டி. தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒரு புறமிருக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடு மையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் மோடியின் இந்த நடைமுறையால் மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஜி.எஸ்.டி.,யின் மூலம், மத்திய அரசு நாடு முழுவதி லுமுள்ள சிறு வர்த்தகர்களை துன் புறுத்துகிறது என்றும், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது, அதே நேரத்தில் நமது மக்களின் சுதந்திரமும், ஜனநாயக மும் 2017, ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது, மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது என்றும் மத்தியில் கேலிக் கூத்தான ஆட்சி நடக்கிறது என்றும் விமர்சித்த மம்தா பானர்ஜி, ஜி.எஸ்.டி. சட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மோசமான கட்டுப்பாடுகள் உள்ளதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ள தாகவும் கூறினார்.
நள்ளிரவு நிகழ்ச்சிகள் தேவையற்றவை - பினராயி
"முதலில் ஜி.எஸ்.டி. நடைமுறை தொடர்பாக மக்களுக்கும், வர்த்தகர் களுக்கும் உள்ள சந்தேகங்களுக்குத் தீர்வு காண வேண்டும். ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை களை நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் நள்ளிரவில் கொண்டாட்டங்களை நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- பெரியாரியல் பயிற்சி முகாம் - குற்றாலம்
- நடக்க இருப்பவை
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம்
- சட்டம் ஒரு இருட்டறை
- மேடைப் பேச்சு குறித்து பெரியார்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
சிறீராம் சேனா தலைவர் கோவாவுக்குள் நுழைய தடை நீட்டிப்பு- கடவுள் சக்தி அவ்வளவுதான் கோவில் வளாகத்தில் தூக்கில் பீகார் இளைஞர்
- மாட்டிறைச்சி பிரச்சினை மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது: நல்லக்கண்ணு பேட்டி
- செய்தித் துளிகள்
- வாகனங்களுக்கான புதிய விலைகள்
No comments:
Post a Comment