Monday, June 12, 2017

தென்மேற்கு பருவமழை தீவிரம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 11- வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந் திரா உள்ளிட்ட மாநிலங் களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அங்கு மழை பெய்து வருகிறது. அதேசமயம், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை காரணமாக எல் லையோர மாவட்டங்களில் பர வலாக மழை பெய்து வருகி றது. இதனால் நேற்று கர்நாட காவில் அதிகபட்சம் 15 செ.மீ மழையும், தெலங்கானாவில் 6 செ.மீ மழையும், ஆந்திராவில் 8 செ.மீ மழையும், கேரளாவில் 5 செ.மீ மழையும் பதிவானது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் ஜூன் ஒன் றாம் முதல் 9ம் தேதி வரை 18 சதவீத மழையும், தமிழகத்தில் 16.4 சதவீத மழையும் பெய்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையொட்டி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  நெல்லை மாவட் டம் மலைப் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையால் குற்றால அருவிகளில் திடீரென தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற் றுலா பயணிகள்  மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று அதிக பட்சமாக ராமநாதபுரம் மாவட் டத்தில் 15.3 மி.மீ மழையும் அதிராம்பட்டினத்தில் 10.9 மி.மீ மழையும், வால்பாறை யில் 12.6 மி.மீ மழையும், உதகமண்டலத்தில் 0.8 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.  இந்நிலையில், வெப்பச் சல னம் காரணமாக தமிழகம் மற் றும் புதுச்சேரியில் இன்று இடி யுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய அதி காரி ஒருவர் கூறியதாவது:
ஆந்திரா மற்றும் ஓடிசாவை யொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்து விட்டது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடியு டன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்மாவட் டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம். சென் னையில் வானம் மேகமூட்டத்து டன் காணப்படும். நகரில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
7 மாவட்டங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் நேற்று 7 மாவட்டங்களில் நூறு டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. அதிக பட்சமாக மதுரையில் 102 டிகிரி, திருச்சி, திருத்தணி, கட லூரில் தலா 101 டிகிரி, சென்னை, நாகப்பட்டினத்தில் தலா நூறு டிகிரி வெயில் அடித்தது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...