சென்னை, ஜூன் 11- தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் பரவியதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரிசி ஆலை கள், மொத்தம், சில்லறை விற் பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனைகளில் சேகரிக்கப்படும் மாதிரிகள், மாநிலத்தில் உள்ள 6 உணவுப் பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து முடிவுகள் திங் கள்கிழமை வெளியிடப்பட உள்ளன.
பெங்களூரு, அய்தராபாத் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடந்த 2 நாள்களாக பல்வேறு வீடியோ பதிவுகளும், செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.
சென்னையில் அயனாவரம் போக்குவரத்துப் பணிமனை யில் பிளாஸ்டிக் அரிசி சமைக் கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என உண வுப் பாதுகாப்புத் துறை, உணவு வழங்கல் துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினர் என பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர்.
தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகள், குடோன்கள், மொத் தம், சில்லறை விற்பனைக் கடை கள் அனைத்திலும் சோதனை கள் நடைபெற்று வருகின்றன. அரிசிகளின் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.
பிளாஸ்டிக் அரிசி புகார் தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி களால் முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் இதுவரை எங்கும் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், உணவுப் பாது காப்பு இயக்ககத்துக்கு கட் செவி அஞ்சல் மூலம் தகவல் அனுப்பி, பிளாஸ்டிக் அரிசி பயன்பாடு இல்லை என்பதை உறுதி செய்து வருகின்றனர். இருப்பினும் அடுத்தகட்டமாக சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரி கள் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், கோவை, பாளையங்கோட்டை, தஞ்சா வூர் ஆகிய 6 இடங்களில் உணவு ஆய்வகங்கள் செயல் பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வகங்க ளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அனுப் பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை உயர் அதி காரி கூறியது: உணவு ஆய்வகங் களுக்கு அனுப்பப்பட்டுள்ள அரிசி மாதிரிகளின் முடிவு திங்கள்கிழமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசியை நீண்ட நாள்கள் சேமித்து வைத்திருப்பதன் கார ணத்தினால் கூட இந்தப் பிரச் சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாடு முற்றிலும் இல்லை. எனினும் ஆதாரப்பூர் வமாக பொதுமக்களுக்கு தெரி விக்கும் வகையில் உணவு ஆய் வகத்துக்கு மாதிரிகள் அனுப் பப்பட்டுள்ளன என்றார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஆன்லைன் வங்கி துறையின் வளர்ச்சியால் பாரம்பரிய வங்கி நடைமுறை வழக்கொழியும்
- குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
- கோரிக்கைகள் நிறைவேற்ற முதல்வர் உறுதி: விவசாயிகள் போராட்டம் நிறுத்திவைப்பு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தென்மேற்கு பருவமழை தீவிரம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
- மினி திறன்பேசியினை அறிமுகப்படுத்தியது நூபியா நிறுவனம்
- வாகனங்களின் டயர் பயன்பாட்டிற்கான விற்பனை சேவை மய்யம்
- எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப விநியோகத்துக்கு பின்னரே இந்திய முறை மருத்துவப்
- படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்
- மதவெறி பொய்யர் கூட்டத்தைத் தோற்கடிப்போம்! திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் சூளுரை
No comments:
Post a Comment