Sunday, May 5, 2013

நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் - தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சியுரை


இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. பொருளாளர்  தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் (4.5.2013)
இராஜபாளையம் மே 5- நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.
இராஜபாளையத்தில் நேற்று (4.5.2013) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்று தி.மு.க. பொருளாளர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது: திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான் சிராணி பூங்காவில்  தொடங்கப்பட்டது.
தி.க. இளைஞரணியின் குறிக்கோள்கள் உன்னதமானவை
திராவிடர் கழக இளைஞரணியினரின் குறிக்கோள்கள் மிகவும் உயர்ந்தவை.
பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் விதவைத் திருமணங்கள் வரதட்சணையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்.
கலைஞரின் அறிவுரை
தி.மு.க. இளைஞரணியினருக்காக ஒரு சின்னம் (Emblem) ஒன்றைத் தயாரித்து தலைவர் கலைஞரிடம் அளித்தோம். அதில் அண்ணா, கலைஞர் உருவம் இடம் பெற்றிருந்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் அதில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கம் சொன்னதுதான் முக்கியம்.
பதவிக்கு ஆசைப்படாதே - கொள்கைக்கு முன்னுரிமை கொடு என்பதற்காகத்தான் அய்யா படம் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னது நமது இளைஞர்களுக்கு முக்கியமான, தேவையான வழிகாட்டுதல் ஆகும். நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறு வயதிலேயே மேடை ஏற்றப்பட்டு உரையாற்றப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அண்ணா அவர்களே அந்த சிறுவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
இந்தச் சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்திருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்றிடு வார்கள். ஆனால் இவர் அருந்திய ஞானப்பால் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு ஈரோட்டுப்பால் என்று 1943ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டவர் தான் நமது ஆசிரியர் பெருந்தகை.
வழிகாட்டுகிறார் ஆசிரியர்
அவரின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடியவை.
இதே ராஜபாளையத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதற்குமுன் நான் கலந்து கொண்டு இருந்தாலும் தாய்க் கழகத்தில் மாநில இளைஞரணி மாநாட்டில், நான் பங்கு பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...