Wednesday, May 22, 2013

நம் பழைய சூதாட்டத்தைப் பரப்பும் சிகாமணிகளுக்கு பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தரலாமே!


- ஊசி மிளகாய்

நெறிகெட்ட கிரிக்கெட் சூதாட்டம்!
சூதாட்டத்தின்மூலம் கிரிக்கெட்டின் மீது - அய்.பி.எல். என்ற ஒரு வாய்ப்பின் மூலம் - திடீர்க் குபேரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!
கிரிக்கெட் தரகர் ஒருவர் தினமும் ரூபாய் ஒரு கோடி வீதம் சம்பாதித் துள்ளார். எந்தாடா ஆச்சர்யம்!
இது எவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - அதுமட்டுமா?
ஏற்கெனவே ஆட்டம் ஆடியவர் களுடன் செய்த ஏற்பாட்டின்படி, பந்தயம் கட்டிய (சூதாட்ட பேரத்தில்) வெறும் ஏழு நிமிடங்களில் இரண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி இன்று வெளியாகியது! எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் இது!
மது, மாது என்பதைவிட இந்தக் கிரிக்கெட் சூது எப்படிப்பட்ட லாபகர மான தொழிலாக பலருடைய ஆதரவின் பேரில் செழித்தோங்கி நடைபெறுகிறது பார்த்தீர்களா? இதைத் தடை செய்ய இதற்குமேலும் காரணங்கள் தேவையா?
தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியாரின் பொருள்களை இங்கிலாந்து நாட்டில் ஏலம் விட்டுள்ளனர்.
காந்தி சீடர்களான ஆட்சியாளர் அதை ஏலம் எடுத்து, காந்தி மியூசியத்தில் வைக்கவேண்டும் அல்லது காந்தி சமாதிக்கு அருகில் அவர் பயன்படுத்திய பொருள் கொண்ட ஒரு காட்சியகத்தை அமைக்கவேண்டுமென்ற எண்ணம்கூட இல்லை. எவர் எவரோ ஏலம் எடுத்துள் ளனர்!
இன்று காந்தி என்றாலே எந்த காந்தி என்று கேட்கும் நிலையில், இதற்காக முக்கியத்துவம் வரும்? அது கிடக்கட்டும்!
காந்தி பயன்படுத்திய சில பொருள் களின் மதிப்பு ஏலத்தில் விடப்பட்டு எடுக் கப்பட்டதின்மீது வந்த தொகை 2  கோடியே 30 லட்சம் ரூபாய்தான்.
ஆனால், 7 நிமிட கிரிக்கெட் சூதாட் டத்தின்மீது சம்பாதிக்கப்பட்ட பணம் ரூபாய் இரண்டரை கோடி (2 கோடியே 50 லட்சம்) ஆகும்!
இரண்டு தராசு தட்டுகளில், காந்தி தட்டு வெயிட் இல்லாதது; மேலே நிற்கும்!
கிரிக்கெட் என்ற விளையாட்டு, வெளிநாட்டு விதேசி, (அது சுதேசி விளையாட்டு அல்லவே) என்றாலும், நம் நாட்டில் ஆண்டியை அரசனுக்குமேல் ஆக்கும் நவீன அலாவுதீனின் அற்புத விளக்காக அல்லவா கிடைத்துள்ளது!
ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தைத் தடுப்பது என்பதன்கீழ் வராது என்பது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கணக்கோ!
அதுமட்டுமா? கொலைகளுக்கும்கூட இந்த அய்.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் காரணமாக அமைந்துள்ளது என்பது மகாராஷ்டிரத்தில் எம்.பி.ஏ., படித்தவன் 30 லட்சம் ரூபாயை இழந்ததைச் சரி கட்ட, ஆள் கடத்தி கொலை செய்த கதை போலவே ஆந்திராவிலிருந்து மற்றொரு வேதனையான செய்தி!
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி, பல் வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என பெற்றோர் கவலை ஒருபுறம், கணவரும், குழந்தை களும் அய்.பி.எல். போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று சண்டை ஆரம்பித்து, ரிமோட்டை வைத்து ஆரம்பித்து - இதனால் அடிவாங்கிய மனைவி, (சீரியல் பார்க்க அவர் விரும்பினார்;
அய்.பி.எல். பார்க்க கணவர் விரும்பினார்) இதனால் மனமுடைந்த மனைவி, மண் ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்துச் சாகும் நிலையில் உள்ளாராம்! என்னே கொடுமை! பரிதாபம்! (நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இது நடந்தது).
இவ்வளவு ஒழுக்கக்கேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மக்களாட்சியின் கடமை அல்லவா?
சூதாட்டத்தில் பங்கு வாங்கி மகிழ்வதா ஆட்சியின் கடமை என்று மக்கள் கேட்கமாட்டார்களா?
இது ஞானபூமியாம்! நம்ம பாரத கலாச்சாரமே சூதாட்டம்தானே!
மஹாபாரதத்தில், தருமன் உள்பட பஞ்சபாண்டவர்கள் தம் பொது மனைவியை (துரோபதையை) பந்தயமாக வைத்து ஆடித் தோற்றதும்,
அதற்குமுன் வேத காலங்களி லும்கூட ஆரியர் சூதாட்டத்தில் ஈடு பட்டு, ஓய்வு அதிகம் (வேறு விளை  யாட்டுத் தெரியாத காலமோ!) என்ப தால் ஆடினார்கள் என்பது உண்மை.
பழைய நம் பாரத கலாச்சாரத்தை நம் கிரிக்கெட் என்ற நவீன விளையாட்டின்மூலம் பரப்புவதற்காக சூதாட்ட வீரர்களுக்கும் பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தந்து கவுரவிக்கலாமே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...